முதல் பதிவும் அதற்கு வந்தப் பின்னூட்டங்களும்

Tuesday, August 08, 2006
வணக்கம் நண்பர்களே!

Posted by Johan-Paris at Tuesday, August 08, 2006




11 comments:
சின்னக்குட்டி said...
வணக்கம் ...வாங்கோ... வாழ்த்துக்கள் யோகன்.....

11:11 PM
வெற்றி said...
யோகன் அண்ணை,
வணக்கம்.
பலரின் பதிவுகளில் நீங்கள் எழுதிய பின்னூட்டங்களைப் படித்துச் சுவைத்து இருக்கிறேன். ஈழத்தின் பல பழைய சங்கதிகளை பதிவிலிடுங்கள். படிக்க ஆவலாக உள்ளேன்.

11:12 PM
குமரன் (Kumaran) said...
வணக்கம் யோகன் ஐயா.

11:43 PM
நன்மனம் said...
வணக்கம், வருக! வருக!

1:17 PM
(துபாய்) ராஜா said...
வணக்கம் யோகன் அண்ணா.நல்வரவு.

1:32 PM
நாகை சிவா said...
வாங்க வாங்க யோகன்
வாழ்த்துக்கள்

1:34 PM
G.Ragavan said...
வாங்க வாங்க அண்ணாத்தே

வந்து இனிமே அள்ளி விடுங்க. நடக்கட்டும். நடக்கட்டும்..

1:46 PM
இலவசக்கொத்தனார் said...
வாருங்கள் வாருங்கள். உங்கள் பதிவுகளைப் படிக்க காத்திருக்கிறோம்.

2:43 PM
Johan-Paris said...
அன்போடு சின்னக்குட்டி,வெற்றி;குமரன்;நல்மனம்; துபாய் ராஜா;நாகை சிவா;ராகவன்;இலவசக்கொத்தனார்! அனைவருக்கும்; நன்றி!
"வைத்துக் கொண்டு வஞ்சனை செய்து பழக்கமில்லை" அதனால் அறிந்ததைத் தெரிந்ததைப் பகிர்வேன். இன்னும் தொழில் நுட்பம் பிடிபடவில்லை. பெயர் எனது ஆனால்; வீட்டைக் கட்ட முழு உதவியும் செய்தவர் மலைநாடர். காணிஉறுதி (பத்திரம்) யில் கையொப்பமிட்டதே! நான்; நண்பர் மலைநாடர் மிகப் பெரிய ஊக்கமும் உதவியும் செய்கிறார். என் வீட்டையும் உங்களைப் போல் அலங்கரிப்பேன்.
முடியாவிட்டாலும் ;விட்டு விட்டு; உங்கள் வீட்டு அலங்காரங்களை வழமை போல் ரசித்து ஊக்குவிப்பேன்.
மனதில் பட்டதைக் கூறுகிறேன். உங்களைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. அழகான தலைப்புக்களில் சுவையாக எழுதுகிறீர்கள்.
தலைப்புக்களும் தூண்டில் போடுவது போல் இருக்க வேண்டும்.
"தண்ணீரில் விழுந்து விட்டேன்; கையைக் காலை அடித்தே ஆக வேண்டும்." அமிழ்வதைத் தவிர்க்க!
வருவேன்.
உங்கள்
யோகன் பாரிஸ்

1:15 PM
Kanags said...
வணக்கம் பரிஸ் யோகன், இதுவரையில் பின்னூட்டங்களில் மட்டுமே அறிந்திருந்தேன். உங்கள் பதிவுகளையும் படிக்க ஆவலாயுள்ளேன். உங்களை தமிழ் மணத்திற்கு அறிமுகம் செய்த குமரனுக்கு நன்றிகள்.

2:19 PM
கானா பிரபா said...
வணக்கம் யோகன் அண்ணா

நாலு நாள் இணையத்தொடர்பில்லாத பூமியில் வேலை. அதனால் உடனே வரமுடியவில்லை. உங்களின் நிரம்பிய தாயக நினைவுப்பதிவுகளை எதிர்ப்பாத்துக் காத்திருப்பவர்களில் நானும் ஒருவன். வாழ்த்தி வரவேற்கின்றேன்.

3:12 PM

பஞ்சாமிர்தம்



பழனிப்...பஞ்சாமிர்தத்துக்குத் தனிச் சிறப்புண்டு.


எனக்கு அதை உண்ணும் சந்தர்ப்பம் கிட்டவில்லை.

உண்டவர்கள் விசேடமெனக் கூறினார்கள்.

ஆனால் சென்ற வேறு கோவில் பஞ்சாமிர்தம் உண்டுள்ளேன்.


இப்போது பஞ்சாமிர்தம் சாப்பிட்டால்; அன்றைய இலங்கைப் பத்திரிகையில் ஓருவர் கேட்ட கேள்வியும் அதற்கு அப்பத்திரிகையின் பதில் கூறுபவர்;
கூறிய பதிலும் பின் அதற்கு நான் எழுதிய கடிதமும்;ஞாபகம் வரும்.

அப்போ இணையத் தளங்கள் இல்லாத காலம்....
அக் கேள்வி;;;;; பஞ்சாமிர்தத்துக்கு எத்தனை பழம் சேர்ப்பது?????

தெரிந்தவர் கூறவும்.

மறுபிறவி.... தமிழ்மணத்தில்




நான் ஏதோ BLOG வண்டியோட்டிக் கொண்டிருந்தேன்.

"Beta" வுக்கு மாறவிருப்பமெனில் மாறலாம்; எனக்கிடந்ததால் ஆர்வக் கோளாறால்(இந்த வயதில் இதா?? எனக் கேட்க வேண்டாம்) கையை வைத்து; உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன் என்பது போல்;சொந்தச் செலவில் சூனியம் வைத்து;( பிளக்கிகள் உதவி) சீயென அலுத்து; என் குருநாதர்; மலை நாடரை வேண்டி;அவர் ;தமிழ்மணத்துக்கு மின்னஞ்சலிடுப்படி கூற; அதைச் செய்தேன்.

எதுவுமே நடக்கவில்லை.பின்னூட்டம் கூட இடமுடியா நிலை பற்றி என் "குமரனுக்கு" தெரியப்படுத்திய போது;அவரே கூறினார்.

ஏன்?? நீங்கள் ஓர் புதிய தளத்தைத் திறக்கக் கூடாது.....முயற்சி செய்யுங்கள். தேவையெனில் உதவுகிறேன்; எனவும் கூறினார்.

இப்போ "என் பார்வையில்";; தமிழ்மணத்தில் உங்கள் பார்வையில்
" எனது பார்வை" யாகவுள்ளது.

விரலுக்கு ஏற்ற வீக்கம் போல் ;ஏதோ எனக்கும் நாலு பேர் இருக்கிறாங்க.

அவங்களை அன்புடன் அழைக்கிறேன்.எனையோரையும் தான்.

ஓம்....நான் மறுபிறவி எடுத்துள்ளேன் .

தமிழ் மணத்தில்.;;OLD is GOLD;பஞ்சாமிர்தம்; மரபுக் கவிதையும்;புதுக் கவிதையும்; எனும் பதிவுகளிட்டுள்ளேன்.

படியுங்கள்;;;;இல்லை இல்லை பாருங்கள்; கருத்தைச் சொல்லுங்கள்.

உங்கள் யோகன் பாரிஸ்