புதன், அக்டோபர் 31, 2007

ஆச்சரியம் ஆனால் உண்மை!!

நாம் அறிந்த வகையில் இயற்கையில் சில நியதிகள் உண்டு. ஆனால் சில வேளைகளில் இந்த நியதிகள் உடைக்கப்படுவதும் உண்டு.


பல வருடங்களுக்கு முன் வந்த 'துக்ளக்' இதழில், இயற்கையின் நியதி தவறும் போது சில அசம்பாவிதங்கள் நடக்கும் எனும் வகையில் ஒரு
துணுக்குச் செய்தி போட்டு, பாம்பு தவளையை விழுங்கும் ஆனால் தவளை பாம்பை விழுங்கினால் மன்னனுக்குக் கேடு...என குறிப்பிட்டிருந்தது.


இதைப் படித்த காலக் கட்டத்தில் ,நான் ஒரு விபரணச் சித்திரம் பார்த்தேன்.
அதில் பாம்பு ,தவளையைத் துடிக்கத் துடிக்க விழுங்கியது.( அது எந்த நாட்டில் பிடிக்கப்பட்ட படம் என்பது தெரியவில்லை)

சில மாதங்களின் பின் நமது, எம். ஜீ. ஆர் அவர்கள் காலமாகிறார்.

என் எண்ணத்தில் வாசித்ததையும், இந்த மரணத்தையும் தொடர்பு படுத்திய வண்ணமே இருந்தது.


இப்போது, யூரியூப்பில்...சும்மா...தேடிப்பார்ப்போம் என நினைத்து, "Frog eats snake" எனத் தட்டிய போது இந்தக் காட்சி கண்டேன்.


பிரான்சில் , ஒரு வகை அமெரிக்க இராட்சத தவளை, இதன் சோடி ஒன்று செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு, பின் ஆற்றில் விடப்பட்டதால், அது பெருகி நீர் நிலைகளில் உள்ள மீன்களுடன், நீர்ப்பறவைகளையும் உண்ணத் தொடங்கியதால், பின் பிடித்து அழித்துக் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.






இதைப் பிரான்சில் Grenouille Taureau என்பார்கள். அதாவது 'எருதுத் தவளை'. 2 கிலோ வரை வளருமாம்.



இப்படத்தைப் பிடித்தவர் , சற்று அதிகமாக ஆட விட்டு விட்டார், எனினும் 1நிமிடம் 5 செக்கனின் மிகத் தெளிவாகத் தெரிகிறது. பாருங்கள்.