மறுபிறவி.... தமிழ்மணத்தில்




நான் ஏதோ BLOG வண்டியோட்டிக் கொண்டிருந்தேன்.

"Beta" வுக்கு மாறவிருப்பமெனில் மாறலாம்; எனக்கிடந்ததால் ஆர்வக் கோளாறால்(இந்த வயதில் இதா?? எனக் கேட்க வேண்டாம்) கையை வைத்து; உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன் என்பது போல்;சொந்தச் செலவில் சூனியம் வைத்து;( பிளக்கிகள் உதவி) சீயென அலுத்து; என் குருநாதர்; மலை நாடரை வேண்டி;அவர் ;தமிழ்மணத்துக்கு மின்னஞ்சலிடுப்படி கூற; அதைச் செய்தேன்.

எதுவுமே நடக்கவில்லை.பின்னூட்டம் கூட இடமுடியா நிலை பற்றி என் "குமரனுக்கு" தெரியப்படுத்திய போது;அவரே கூறினார்.

ஏன்?? நீங்கள் ஓர் புதிய தளத்தைத் திறக்கக் கூடாது.....முயற்சி செய்யுங்கள். தேவையெனில் உதவுகிறேன்; எனவும் கூறினார்.

இப்போ "என் பார்வையில்";; தமிழ்மணத்தில் உங்கள் பார்வையில்
" எனது பார்வை" யாகவுள்ளது.

விரலுக்கு ஏற்ற வீக்கம் போல் ;ஏதோ எனக்கும் நாலு பேர் இருக்கிறாங்க.

அவங்களை அன்புடன் அழைக்கிறேன்.எனையோரையும் தான்.

ஓம்....நான் மறுபிறவி எடுத்துள்ளேன் .

தமிழ் மணத்தில்.;;OLD is GOLD;பஞ்சாமிர்தம்; மரபுக் கவிதையும்;புதுக் கவிதையும்; எனும் பதிவுகளிட்டுள்ளேன்.

படியுங்கள்;;;;இல்லை இல்லை பாருங்கள்; கருத்தைச் சொல்லுங்கள்.

உங்கள் யோகன் பாரிஸ்

4 மறுமொழிகள்:

Kannabiran, Ravi Shankar (KRS) :சொல்வது

மறு பிறவியா
இல்லை புது அவதாரம் என்று சொல்லவா? தனி மின் மடலும் பாருங்கள்!

வாழ்த்துக்கள் யோகன் அண்ணா!
விண்முட்டும் கோபுரத்துடன் நல்ல தொடக்கம்! தொடரட்டும் இந்தப் புதுப் பூவிலும்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

ரவி சங்கர்!
தங்கள் தனிமடலும் பார்த்தேன். இன்னும் கருவிப்பட்டை பொருத்தும் சிரமத்தால் என் பதிவெதுவும் தமிழ்மணத்தில் தெரியவில்லை.
குமரன் உதவுவதாக விபரம் பெற்றுள்ளார் பார்ப்போம்.
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

Anonymous said...
welcome, welcome.

Keep posting.

6:37 PM
Johan-Paris said...
அனாமியாக வந்த அன்பருக்கு!
இயன்ற அளவு;தெரிந்ததை எழுதுவேன். வரவுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

9:06 PM
sinnakuddy said...
welcome welcome johan

5:26 PM
காண்டீபன் said...
wel come wel come

5:33 PM
கானா பிரபா said...
ஆகா இப்பதான் நிம்மதி,
ஆனாலும் நீங்கள் மீண்டும் பழைய புளக்கருக்கே வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

1:22 AM
Post a Comm

குமரன் (Kumaran) :சொல்வது

மீண்டும் வருக யோகன் ஐயா.