பஞ்சாமிர்தம்
பழனிப்...பஞ்சாமிர்தத்துக்குத் தனிச் சிறப்புண்டு.
எனக்கு அதை உண்ணும் சந்தர்ப்பம் கிட்டவில்லை.
உண்டவர்கள் விசேடமெனக் கூறினார்கள்.
ஆனால் சென்ற வேறு கோவில் பஞ்சாமிர்தம் உண்டுள்ளேன்.
இப்போது பஞ்சாமிர்தம் சாப்பிட்டால்; அன்றைய இலங்கைப் பத்திரிகையில் ஓருவர் கேட்ட கேள்வியும் அதற்கு அப்பத்திரிகையின் பதில் கூறுபவர்;
கூறிய பதிலும் பின் அதற்கு நான் எழுதிய கடிதமும்;ஞாபகம் வரும்.
அப்போ இணையத் தளங்கள் இல்லாத காலம்....
அக் கேள்வி;;;;; பஞ்சாமிர்தத்துக்கு எத்தனை பழம் சேர்ப்பது?????
தெரிந்தவர் கூறவும்.
14 மறுமொழிகள்:
யோகன் அண்ணா
அழகான பால தண்டாயுதபாணி படம்!
மிக்க நன்றி! புது வலைப்பூ பூத்துக் குலுங்கவும் வாழ்த்த்துக்கள்!
தனி மடல் அனுப்பியுள்ளேன் உங்கள் பீட்டா பற்றி; சுப்ரபாதப் பதிவில் பின்னூட்டமாக இட்டேன்; நீங்கள் பார்க்கவில்லை என்றால் தனிமடலில் காணவும்!
பாம்பன் சுவாமிகள் தனது பதிகத்தில் பஞ்சாமிர்தம் பற்றிப் பாடியுள்ளார்.
பழம், பால், நெய், தேன், சர்க்கரை/கல்கண்டு இவையே ஐந்து பொருட்களாகச் சொல்லி ஒவ்வொன்றிலும் அபிஷேகத்தை விவரித்துள்ளார்.
பழம் பொதுவாக வாழை மட்டுமே!
பின்னாளில் பல பழங்கள், பேரீச்சம் பழம் எல்லாம் சேர்ந்து கொண்டாலும், வாழை இல்லாமல் பஞ்சாமிர்தம் கிடையவே கிடையாது!
என் அறிவுக்கு எட்டியதைச் சொன்னேன்; தவறு இருந்தால் அடியேனைத் திருத்தவும்!
ரவி சங்கர்!
தங்கள் ஊக்கத்திற்கு நன்றி!! தங்கள் சுப்ரபாதப் பதிவில் யாவும் பார்த்தேன்.
பஞ்சாமிர்தம் பற்றி ஏனையோர் கருத்தையும்; பார்த்தபின்......பார்ப்போம்.
முடிந்தால் பாம்மன் சுவாமி பாடலைத் தரமுடியுமா????அல்லது இணையச் சுட்டி தாருங்கள்!!
யோகன் பாரிஸ்
ஐந்து (பஞ்ச) பொருட்கள்
1.மலை வாழைப்பழம்
2.பேரீச்சம்பழம்
3.கற்கண்டு
4.பச்சைகற்பூரம்
5.ஏலக்காய்
6.நாட்டு வெல்லம்
7.பலாபழம் சேர்பதும் உண்டு
நிறை உண்டேன் ஆனால் தங்களைப்போல் பனைபொருட்கள் தான் துண்ணல
என்னார் அண்ணா!!
ஐந்துக்கு; ஏழு கூறியுள்ளீர்கள். எத்தனை பழமென ஏதாவது;குறிப்பிட்ட எண்ணிக்கையுண்டா??,என அறிந்தவர் கூறட்டும்.
என் தளத்தில் கருவிப்பட்டை பொருத்தாததால்;என் பதிவெதுவும் தமிழ்மணத்தில் தெரியவில்லை.
அதை முயன்று தோற்றுப் போனேன்.
இதனால்"நான் பஞ்சாமிர்தம்" போட்டது பலருக்குத் தெரியாது.
பார்ப்போம்;;;; மற்றவர் கருத்தையும்....
அதன்பின் என் இலங்கைப் பத்திரிகை விபரம் கூறுகிறேன்
கருத்துக்கு நன்றி
யோகன் பாரிஸ்
தனித்திருந்து வாழும் மெய்த்தவமணியின் படத்திற்கு நன்றி யோகன் ஐயா.
பஞ்ச அமிர்தம் பற்றி ரவி சொல்வது போலத்தான் இருக்கும் சாப்பிட:-)
என்னார் ஐயா சொல்வதுபோல் பேரீச்சம்பழம் தட்டுப்படும்.
எழுத்தில் அமிர்தம் ருசிக்க வைத்ததற்கு நன்றி.
மிஸ்டர் யோகன் பாரிஸ்
கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்
PANCHAMIRTHAM. Banana, 1. Grapes, a small buch. Raisins, 1 tsp. Dry dates, 3. Apple, 1. Jaggery, 1 cup. Honey, 1/4 cup. Ghee, 6 tsp ...
www.numkitchen.com/sw17_panchamirtham.htm
வல்லி!
நீங்களும் ரவி சங்கர் கூறியதை ஒப்புக் கொள்கிறீர்களா??
பார்ப்போம்...
என்னும் சில என் அன்புள்ளங்கள் வந்து இன்னும் என்ன?? பழம் போடுறாங்க!! என்று பார்ப்போம்.
வரவு கருத்துப் பகிர்வுக்கு நன்றி!!
இப்போ என் புளக்கர் சிக்கலில்லாததால் ;தங்கள் பதிவுப் பக்கம் பின்னூட்டும் சிரமமில்லை.
யோகன் பாரிஸ்
சுப்பையா அண்ணா!!
நீங்கள் இப்படியா??? சொல்கிறீர்கள்!!
ஆனால் என் கேள்வி (அதாவது 87 ல் ஓர் அன்பர் ஈழத்துப் பத்திரிகையில் கேட்டது) எத்தனை வகைப் பழம் சேர்ப்பது.?
பார்ப்போம்;;;எனையோர் சிலர் வரவேண்டும்.
நான் இந்த அமுதம் போட்டது. பலருக்குத் தெரியாது.
வரவுக்கு நன்றி
யோகன் பாரிஸ்
கானா பிரபா said...
எனக்குத் தெரிந்து, மாம்பழம், வாழைப்பழம், பேரீச்சை, பலாப்பழம், தோடை,
சரியா:-)
1:20 AM
Johan-Paris said...
பிரபா!
எனக்கும் அதுதானே பிரச்சனை!!! புளக்கர் சரியாக்கினால் இன்னும் பலர் "எப்படியில்" இருந்து விடுபட்டு வரலாம்.
இன்னும் இப்பதிவு தமிழ் மண முகப்புக்கு வரவில்லை.
அப்போ பல விடைகள் வரச் சந்தர்ப்பம் உண்டு. அதன் பின் 80 ல் வந்த தினபதி கேள்வி பதில் பற்றித் தருகிறேன்.
யோகன் பாரிஸ்
11:42 Am
யோகன் அண்ணா,
பழனி ஆண்டவர் கோவில் பஞ்சாமிர்தம் சுட்டி தட்டுப்பட்டது; இதோ
http://palani.org/panchamirtham.htm
முன்பே சொன்னது போல பின்னாளில் பல பழங்கள் சேர்ந்து கொண்டாலும், அப்பன் முருகனின் அபிடேகத்துக்கு இசைந்த பழம் வாழை ஒன்றே!
பேரீச்சம், உலர்ந்த திராட்சை, சர்க்கரை, கல்கண்டு, நெய், ஏலக்காய் இவை சேர் பொருட்கள்; மூலப் பொருள், பழம்! அதுவும் வாழை ஒன்றே!
பாம்பன் சுவாமிகள் பாடலின் சுட்டி கிடைத்தவுடன் அனுப்புகிறேன்! பஞ்சாமிர்த அபிடேகப் பாடல்!
"இலங்கு நன்கணை விரிஞ்சனோடு" என்று தொடங்கும்ன்னு நினைக்கிறேன்.
ரவி சங்கர்!
தாங்கள் இட்ட சுட்டி பார்த்தேன். தகவல்களுக்கு நன்றி!
இன்னும் என் பதிவு தமிழ் மண முகப்புக்கு வரவில்லை. அதனால் பலருக்குத் தெரியாது
தொழில் நுட்ப விடயங்கள் பீற்றாவின் பின் எனக்குப் பெரிய பிரச்சனையாக உள்ளது.
குமரனும்;மலைநாடரும் உதவுவதாகக் கூறினார்கள்.
அது வரை பொறுத்துப் பதிலிடுகிறேன்.
யோகன் பாரிஸ்
சின்னக் குட்டியர்!
என்னது??? பஞ்சாமிர்தம் புறுட் சலாடா??(வேறு பதிவில் இட்ட பின்னூட்டுக்குப் பதில்) என்னைக் குழப்பவேண்டாம்.
பார்ப்போம்.
யோகன் பாரிஸ்
பஞ்சாமிர்தம் என்பது = பஞ்ச (ஐந்து) + அமிர்த்ம் என்று சிறு வயதில் சமயப் புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்.
அதில் கட்டாயம் இடம் பெற வேண்டியவை முக் கனிகள் (வாழைப் பழம், பலாப் பழம், மாம் பழம்) பின்பு அதில் வேறு இருவகைப் பழமும் (ஊரில் பேரீச்ச்ம் பழம்/ மாதுளம் பழம்/ தொடை) ஆகியவற்றினைப் பஞ்சாமிர்தத்திலே கண்டிருக்கிறேன்... தேன்/கற்கண்டு போன்றனவும் சேர்க்கப்படும்...
//சின்னக் குட்டியர்!
என்னது??? பஞ்சாமிர்தம் புறுட் சலாடா??(//
ஆமாம் அது சாமிக்குக் கொடுக்கப்படும் அந்த நாள் புரூட் சலட் ;) ஹஹஹ
ஹரன்!
இந்த தளம் சில சிக்கலில் இருந்ததால் , இந்த பதிவுக்கு நான் இன்னும், என் பதிலிடவில்லை
அதை தனிப் பதிவாக விரைவில் போட உள்ளேன்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
உங்கள் கருத்துக்கு