மண் குதிரை -மங்கு திரை -மண் குதிர்....
மண் குதிரை -மங்கு திரை -மண் குதிர்....
" மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே!!!".....இப்படி ஓர் பழ மொழியோ!!!,சொல் வழக்கோ!!
நீங்கள் கேட்காமல் இருந்திருக்க முடியாது.
அதாவது...இதைச் சொல்பவர்கள் எல்லோருமே!!!! ஆற்றைக் கடக்க ஒருவன் மண்ணில் குதிரையைச் செய்து முயலக் கூடாது; எனும் கருத்திலேயே!!!! உபயோகிக்கிறார்கள்.
அவன் ஆறு கடக்க ; மண்மாடோ!
மண் கழுதையோ; மண் கப்பலோ நம்பக்கக் கூடாதெனச் சொல்லவில்லை.
மண் குதிரையெனவே! சொல்லப்பட்டுள்ளது.
இதைப் பற்றிச் சிந்தித்தால் ; ஆறைக் கடக்க குதிரை தேவை எனும் சிந்தனையுள்ள ஒருவன்; அதை மண்ணிலா???செய்வான்....
எனவே!!!!!இந்தக் "குதிரை" சிந்தனைக்குரியது.
ஏன்??? இந்த சொல்வழக்கம் வந்தது.சிலர் கூறுகிறார்கள் ....இது மண்குதிரை அல்ல "மங்கு திரை" அதாவது அடங்கி; தேய்ந்து போகின்ற அலை;.;;;;;(திரை=அலை- திரை கடலோடியும் திரவியம் தேடு); அதை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது.காரணம் அது மீண்டு வரும்.
ஆனாலும் ஆற்றில் அலைகள் ; கடலைப்போல வந்து போகும் தன்மையற்றது; பதிவை நோக்கி வெறியுடன் வழிந்தோடுவது....அதனால் மங்கும் திரை ;மங்கும் அலை சாத்தியமல்ல!!!ஆற்றலை பொங்கும் அலை!
அப்படியானால் ....;என்ன தான் சொல்லியுள்ளார்கள்.
அவர்கள் சரியாகத் தான் சொல்லியுள்ளார்கள்!!!
அவர்கள் சொன்னது...;மண் குதிர் ; அதாவது மண்பிட்டிகள்;மண் திட்டுக்கள்! ஆற்றின் ஓட்டதால் வரும் மண் அங்காங்கே!! குவியலாகச் சேரும் அது "நெற்குதிர் போல் கூம்பாக இருக்கும் ;அதை நம்பி ஆற்றில் இறங்கினால். அதில் காலை வைத்தால்( அது உயரமாக உள்ளதைப் பிட்டி என நம்பி)
சொரிந்து போகும் தன்மையுடைய "மண் குதிர்" கலைந்து; நீருனுள் அமிழும் ஆபத்துள்ளது.
இதைத் தான் நம் முன்னோர் !!!!சரியாகத் தான் சொல்லியுள்ளார்கள்.
நாமோ;;நம்முரையாசிரியர்களோ!!!!தவறாகப் புரிந்து விட்டோமென!!!
நான் இலங்கையில் மலையகத்தில் கடமைபுரியும் போது; ஆற்றில் குளிக்கையில் ஓர் முதியவர் விளக்கினார்;
அவர் விளக்கம் பொருத்தமாகத் தானே உள்ளது.
நீங்கள் என்ன ?? சொல்கிறீர்கள்!
இப்போ பார்ப்போமா,,,???"யை" ஐ விட்டு!
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே!!!
14 மறுமொழிகள்:
இதே போல அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை யென்பதற்கும் சரியான ஒரு வடிவம் இருக்கிறது.. தெரிகிறதா..
சயந்தா!!
தெரியும், அடுத்து அதை விடலாம் என இருந்தேனப்பா???
வருகைக்கு நன்றி
யோகன் பாரிஸ்
அன்பு யோகன்,
//திரை=அலை- திரை கடலோடியும் திரவியம் தேடு; அதை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது.காரணம் அது மீண்டு வரும்.ஆனாலும் ஆற்றில் அலைகள் ; கடலைப்போல வந்து போகும் தன்மையற்றது; பதிவை நோக்கி வெறியுடன் வழிந்தோடுவது....அதனால் மங்கும் திரை //
ஆமாம். அங்கும் நீர்வரத்து குறைவாயுள்ளதென நம்பி ஆற்றில் இறங்கினால், அது சமயம் காட்டாற்று வெள்ளம் போல் வருமாகில் ஆபத்துதானே! அங்கும் மங்கு+திரை எனவும் கொள்ளலாமே.
இருப்பினும் இறுதியில் கூறியது மிகப்பொருத்தமே!
யோகன் அண்ணை,
இணையத்தள சிக்கல்கள் நீங்கி, மீண்டும் வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. மண் குதிரைக்கான உங்களின் விளக்கத்திற்கு மற்றவர்கள் சொல்லும் கருத்தை அறிய நானும் ஆவலாக உள்ளேன். நன்றி.
ஞானவெட்டியான் ஐயா!
வருகை கருத்துக்கு நன்றி!!!!
இந்தப் பொங்குதிரை (காட்டாற்று வெள்ளம்) அனுபவமும் நமக்குண்டு. தப்பியதால் தான் இதை எழுதுகிறேன்.
கடைசி மிகப் பொருத்தமே!
யோகன் பாரிஸ்
வாழ்வில் பழமொழிகள் என்ற நூலில் இது போன்ற கருத்தில் வாசித்ததாக ஞாபகம். இருந்தாலும் நல்ல விளக்கம் நன்றி யோகன்.
"என் பார்வை" சரியாகத்தான் வேலை செய்கின்றது என நினைக்கின்றேன். மறுமொழி மட்டறுக்கப்படவில்லை. தமிழ்மணத்திற்கு அறிவியுங்கள். "என் பார்வையில்" எந்தவிதமான பிழையும் இல்லை.
தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பழமொழிகளில் மண்குதிரையும் ஒன்று.. மண் குதிர் என்பதே சரி. நல்ல விளக்கம்.
நன்று யோகன் பாரிஸ்.
வெற்றி!
நீங்கள் தாயகம் சென்ற செய்தி யாரோ ஒருவருக்கு நீங்கள் இட்ட பின்னூட்டத்தில் பார்த்தேன். ஆனாலும் நீங்கள் போகும் போது ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். நான் ஒரு பார்சலும் தந்துவிட்டிருக்க மாட்டேன்;. எல்லோரும் நலமா???
நான் பீட்டாவுக்கு மாறி(தனக்கெடாச் சிங்களம் தன் பிறடிக்குச் சேதமென்பாங்க - நாட்டில்) கணனி பற்றித் தெரியாமல் அல்லாடி!!; தம்பி பகீ (ஊரோடி) யாழில் இருந்து கை கொடுத்து; இப்போ காட்சி தருகிறது; ஆனாலும் ;இது சரியாப் புரியல அப்பு!!!
அது சரி...ஏன் மற்றவர் ..;என்ன???கூறுகிறார்கள் எனப் பார்க்கிறீர்கள்;;;;அடடா!!!நீங்க படிச்சவங்க! என்பதைக் காட்டுகிறீங்க போல இருக்கு!!
எனக்கு நீங்க என்ன ? சொல்கிறீர்கள் என்பதே!! தேவை!!!
படார் ....என விடுங்கோ,,,!!!
யோகன் பாரிஸ்
பகீ!
தங்கள் கருத்துக்கு நன்றி!
செய்த உதவிகளுக்கு வார்த்தையில்லை;
தாங்கள் கூறியவண்ணம் செய்கிறேன்;
யோகன் பாரிஸ்
வணக்கம்...யோகன்..உதுக்கு எல்லாம் விளக்கம் சொல்றதுக்கு... அறிவு எனக்கு இல்லை... ஆனால்.... ஒன்று மட்டு விளங்குது...பீற்றா புளக் மட்டும் நம்பி இறங்க கூடாது என்று நினைக்கிறார்..யோகன்.. என்று..
"உதுக்கு எல்லாம் விளக்கம் சொல்றதுக்கு... அறிவு எனக்கு இல்லை..."
சின்னக் குட்டியர்!
உங்களுக்கு அறிவில்லையா??? யார் சொன்னது....சரி அப்ப யாருக்கு அறிவிருக்கிறது.
அதையாவது சொல்லுங்கோ!!
யோகன் பாரிஸ்
மிகச் சிறப்பா இந்த பழமொழிக்கு சரியான விளக்கம் சொன்னீர்கள் ஐயா. அடுக்கு அடுக்கா ஒவ்வொரு விளக்கமா நல்லா சொன்னீங்க. மிக்க நன்றி. படித்து மிக மகிழ்ந்தேன்.
பின்னூட்டங்களும் நன்று. வெற்றியிடம் சொல்லிட்டு போயிருக்கலாம்; ஒரு பார்சலும் தந்திருக்க மாட்டேன் என்ற குறும்பை ரசித்தேன்.
சின்னகுட்டியாரின் பீட்டா பிளாக்கை நம்பி இறங்கக் கூடாது என்பதையும் ரசித்தேன்.
:-))
இப்படியான கட்டுரைகள் நம்மவர்களுக்குத் தேவை.
இது பற்றி ஈழத்து தமிழ்ப் பாடப் புத்தகத்தில் விழக்கி உள்ளார்கள் ஆண்டு பத்தா இல்லை பதினொன்றா என்று மறந்து விட்டேன்...
ஆயினும், தமிழ் ஆசான்கள் நான் படித்த பொழுது (90 நடுப் பகுதியில்) இவற்றைச் சரியாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என எண்ணுகிறேன்...
தமிழை எப்படி எல்லாம் மாற்றலாம் பாருங்கள்?? ஒரே விதமாகக் கூறப்படும் விடயங்கள் வேறு வேறு பொருள் தருகின்றன.
**தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா"
ஹரன்!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
உங்கள் கருத்துக்கு