Old is Gold



















ஐரோப்பியர் பழமையைப் பேணுவதில் வல்லவர்கள்;
அதைப் பணம் பண்ணுவதிலும் விண்ணர்கள்.

இங்கு சாதாரணமாக வீடுகளில் உள்ள பொருட்களுகே!!!
நூற்றாண்டுக் கணக்கில் வயது சொல்லுவார்கள்.

இவர்கள் சிலை ;ஓவியம் என்றல்ல !!!எதையும் பழசானால்
பேணுகிறார்கள்; அதைப் பணமாகிறார்கள்.

பழம் பொருள் அங்காடி இங்கே செல்வம் கொழிக்கும்
ஓர் தொழில்!!!!; இதில் பலர் ஈடுபட்டு செல்வச் சீமானாகவும்;
உலக நாடுகளையே வலம் வந்தவர்களாகவும் உள்ளது ;
கண்கூடு.

இத் தொழிலில் யூதர்கள் மிகவும் அதிகமாக உள்ளார்கள்.
கச்சிதமாகப் பணம் பண்ணுகிறார்கள்.

குடும்பமே இக்கலையில் கரைகண்டவர்களாக இருக்கிறார்கள்.
நம்பகக் கஸ்ரம் ஓர் சிலை பற்றிய விளக்கம் என் மனைவிக்குக் கூறிய பையனின் வயது 9.

சிலை;ஓவியம்;நகை;உடை; இசைத்தட்டு;முத்திரை;
உலோகப் பொருட்கள்; மரத் தளபாடங்கள்;கருவிகள்;
கண்ணாடிப் பொருட்கள்;பீங்கான் பொருட்கள் என

5 கண்டத்திலுள்ள
அனைத்தையும் ஒரே இடத்தில் குவிப்பார்கள்
.

இத்தடவை பார்த்ததில் இந்தியப் பொருட்கள்
மிகக் குறைவு.

இங்கு வந்த காலம் முதல் இதை பார்க்க வருடாவருடம் செல்வேன்; இம் முறை என் குட்டி NIKON உடன் சென்றேன்.

வாத்சாயனரின் சூத்திரங்களை யானைத் தந்தத்தில் யப்பானியர் வடித்த உள்ளங்கையளவு சிலைகள்(இந்த சுளகும் தானியமும் எலியும் போல்) ; தணிக்கை கருதிப் பிரசுரிக்கவில்லை.

சிலர் படம் பிடிக்க அனுமதிக்கவில்லை. பலர் அன்புடன் விளக்கமும் தந்து படமும் பிடிக்க விட்டார்கள்.

நான் எப் பொருளையும் வாங்கக் கூடியவனில்லை என்பது தெரிந்தும்.இங்குள்ள பொருள்களில் மிகவிலை குறைந்ததே!!! 50 யூரோக்கள்........

ஒரு கரண்டி கிடைக்கும் அந்த விலைக்கு....!!!!

இவற்றை ஒருங்கே ஓர் இடத்தில் பார்ப்பதே எனக்கின்பம்!!!!பார்த்து ரசித்தேன்.

படமும் பிடித்தேன் உங்களுக்காக...

17 மறுமொழிகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

test

தமிழ்நதி :சொல்வது

புகைப்படங்கள் அருமை யோகன். எனக்கும் பழம்பொருட்கள், பழைய கட்டிடங்கள், சிற்பங்கள் என்றால் தனி விருப்பம். பார்க்கப் பிடிக்குமளவிற்கு வாங்க முடிவதில்லை. அதென்னவோ புத்தகங்கள் மட்டும் விதிவிலக்கு. பிரான்சில் நடந்த பழம்பொருட் கண்காட்சியா இது…? பாரிஸில் எந்தப் பகுதியில் வசிக்கிறீர்கள்…? எனது நண்பர்கள் சிலர் அங்குள்ளனர்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

தமிழ்நதி!
இந்தப் பதிவிட்டு எவருமே!!பார்க்கவில்லையென நினைத்தேன். நீங்களாவது பார்த்தீர்கள்;
இங்கே!!சகல பட்டணம்;கிராமம் எங்கும் இந்தக் விற்பனைக் கண்காட்சி வருடம் பூராகவும் மாறி மாறி;நடக்கும்
இது பாரிஸ் 16 ல்(வெள்ளவத்தை போல்) நடந்தது.நான் வருடாவருடம் பார்க்கத் தவறுவதில்லை.
நான் பாரிசின் புறநகரில்(8 கி மீ)CLICHY ல் வசிக்கிறேன்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
தாங்கள் தற்போது கனடாவில் வசிக்கிறீர்கள்...சென்னையில் வாழ்ந்துள்ளீர்கள்...இவை சரி என நினைக்கிறேன்.
யோகன் பாரிஸ்

அ. இரவிசங்கர் | A. Ravishankar :சொல்வது

யோஹன் - என் பதிவுக்கு வருகை தந்ததற்கு நன்றி.

மெனக்கெட்டு அந்தப் பதிவைப் போட 90 நிமிடங்கள் ஆனது ! தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததில் மகிழ்ச்சி.

ஆமாம், தமிழ்ப் பள்ளிகள் குறித்து நீங்கள் தகவல் தந்தீர்கள். ஆனால், இன்னும் அத்தகவலை பயன்படுத்தவில்லை. அதற்கு மன்னிக்கவும் வேண்டும். லைடன் பள்ளி சிறிதாக இருப்பதாக கேள்விப்பட்டதால் போய்ப் பார்க்கவில்லை. டென் ஹாகுக்கோ ஆம்சுடர்டாமுக்கோ போய் பார்க்க வேண்டும். நாளை உத்ரெஹ்டில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கிறார்கள். அதற்குப் போகலாமா என்று யோசித்ததுக் கொண்டிருக்கிறேன். நிறைய இலங்கைத் தமிழர்கள் இங்கு பழக்கமாகி இருக்கிறார்கள். பல விதயங்களிலும் நட்பாகவும் உதவியாகவும் இருக்கிறார்கள். அவர்களை அறிய அறிய ஈழ விதயங்களை அறிந்து கொள்வதில் அக்கறை அதிகமாகிறது.

லைடன், டெல்ஃட் என்று இலங்கையில் தீவுகள் பெயர் இருப்பதை முன்னர் தெரிந்து கொண்ட போது ஆச்சர்யமாக இருந்தது

றெனிநிமல் :சொல்வது

அருமையான படங்கள்.
நன்றி ஜோன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

றொனிநிமல்!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) :சொல்வது

யோகன் ஐயா. நீங்கள் மட்டும் பார்த்து ரசித்ததோடு நில்லாமல் எங்களுக்காக நிக்கானுடன் சென்று படம் பிடித்து இட்டதற்காக நன்றி. :-)

நண்பர்கள் பலரின் பதிவுகளையும் சேர்த்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டு வருவதால் தங்கள் பதிவிற்கு சில நேரங்களில் காலம் தாழ்த்தி வரும் வாய்ப்புண்டு. ஆனால் காலம் தாழ்த்தியாவது நான் உங்கள் பதிவுகளைப் படிப்பேன். அதனால் வீணாகிவிட்டதோ என்று எண்ண வேண்டாம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

அன்புக் குமரன்!
ஆசையிருந்தும்; நேரம் என்னைபோல் பலருக்குச் சிரமமாக உள்ளது. அறிவேன்.;
அதனால் வசதி போல் படிக்கவும்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

யாழ் அகத்தியன்!
படங்கள் பிடித்ததா? எனக்குப் பெரிதாக படப்பிடிப்பு நுணுக்கம் தெரியாது. இயன்றவரை செய்தேன்.பாராட்டு மகிழ்வைத் தந்தது.
வரவு கருத்துக்கு நன்றி!
இனிய புதுவருட வாழ்த்துகள்;
யோகன் பாரிஸ்

rahini :சொல்வது

புகைப்படங்கள் அருமை யோகன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

ராகினி!
உங்களுக்குப் படங்கள் பிடித்திருந்தால் எனக்கு மகிழ்வே!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
யோகன் பாரிஸ்

david santos :சொல்வது

Hello!
THIS WORK IS VERY GOOD. tSTE VERY OF THE INDIAN CULTURE.
TANK YOU

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

Dear Mr.Santos!
I am really Happy about your comments. I looked your Blog. and found you are a Potugese.
We are Srilanakan got historical connection with Potugal.
Thanks again

Unknown :சொல்வது

இவற்றை ஒருங்கே ஓர் இடத்தில் பார்ப்பதே எனக்கின்பம்!!!!பார்த்து ரசித்தேன்.

எனக்கும் இப்படியானவைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பதில் சந்தோசம்.

Unknown :சொல்வது

எங்கள் கண்களுக்காக அருமையான
படங்கள் காட்சிக்கு வைத்துள்ளீர்கள்.
பழம்பொருட்கள் கடைகள் பார்த்தால் நுழைந்துவ்விடுவேன். வாங்க அல்ல..
ச்சும்மா பார்க்கத்தான்...நன்றி..யோகன்!
நானானி.

வவ்வால் :சொல்வது

யோகன் ,
உங்களுக்கு தன்னடக்கம் மிக அதிகம், அருமையாக இருக்கிறது படங்கள். புராதான கலைப்பொருட்கள் எல்லாம் பெரும் பணக்காரர்களால் மட்டுமே வாங்க முடியும், இங்கேயும் சாதாரணக் கலைப்பொருட்களே விலை அதிகமா இருக்கு , ஒரு பூச்சாடி கூட 10000 ரூபாய் சொல்வாங்க!

எதாவது கடை சன்னல் வழியே வேடிக்கை மட்டுமே நமக்கு :-))

இந்தியாவில் கூட திப்பு சுல்தானின் வாளை விஜய் மல்லையா என்ற பெரும் மது பான தொழிலதிபர் சமிபத்தில் பல கோடிகளுக்கு ஏலம் எடுத்தார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

//உங்களுக்கு தன்னடக்கம் மிக அதிகம்//
வவ்வால்!
நீங்கள் எதை வைத்து மேற்படிக் கூற்றைக் கூறுகிறீர்கள் எனத் தெரியவில்லை; ஆனால் இவற்றை வாங்கும் நிலையில் நான் இல்லை எனபதை வைத்தானால். அந்த உண்மையைக் கூற வேண்டும்.
முகம் தெரியா உங்களைப் போல்;எனக்கு நன்கு தெரிந்த சிலர் என் பதிவைப் படிக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்குக் கூட வருபவர்கள். என்ன?? இந்த ஆள் நல்லா??றீல் விடுகிறார்...என ஏளனம் பண்ணக்கூடாது.
அத்துடன் இல்லாமை இழிவல்ல...இருப்பதுபோல் நடிப்பது.;மிக இழிவு...
உங்களுக்குப் படங்கள் பிடித்திருந்தால் மிகச் சந்தோசம்.
மல்லையா...சுல்தான் வாளை வாங்கட்டும்; இல்லாவிடில் அது..;ஐரோப்பிய;அமெரிக்கர் வசமாகிவிடும்.
நமது கலைப் பொக்கிசங்கள் நம்மவர்கள் வசம் இருக்கட்டும்.
இவர் பற்றி ஒரு விபரணம் பார்த்தேன். மாளிகைபோல் கப்பல்; கலை நயத்துடன் வைத்துள்ளார்.