அடையார்...



அவன் அடையான்;


அவள் அடைச்சி;


அது அடைப் பெட்டை;


அடையார் பிக்பொக்கட் அடிச்சிருவாங்க கவனம்!! ;


அடையான் கடையில வாங்கலாம்!!


இப்படியான சொற் புழக்கத்தை.பாரிஸ் வந்து ,பாரிசில் வாழும் ஈழத்தமிழருடன் பழகியவர்கள் கேட்டிருக்காமல் இருக்க முடியாது.

வட ஆபிரிக்க நாடுகளான அல்ஜீரியா,மொறக்கோ;துனிசியா வைச் சேர்ந்தோர் பிரான்சில் அதிகம் உள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம்.


இந்நாடுகள் பிரான்சின் காலனித்துவத்தில் இருந்ததால் அவர்கள்

இங்கே பலதசாப்தங்களுக்கு முன் குடியேறி வியாபாரம் போன்ற
துறைகளில் கால் பதித்துள்ளார்கள்.


நம் நாட்டில் பெட்டிக்கடைப் பாங்கான வியாபார நிலையங்களை ;

இங்கே இவர்கள் தெருவுக்குத் தெரு வைத்திருப்பதைக் காணலாம்.

இவை பலசரக்குக் கடைகளாக இருக்கும்.இவர்களின் சிறப்பம்சம்; இக்கடையுள்ள கட்டடங்களில் மேல்மாடிகளில் வசிப்பது ;

நேரகாலமின்றிக் கடையைத் திறந்துவைத்து வியாபாரம் செய்வது.
இவர்களை ;நம் ஈழத்தவர் குறிப்பிடும் செல்லப் பெயரே!!
அடையான்..;அடையார்

இக் குறியீட்டுப் பெயர் ...இந்த மக்களுக்கு வந்ததற்கு அதுவும்

ஈழத்தவர்கள் மத்தியில் புழக்கத்துக்கு வந்ததற்கு;

ஒரு சுவையான உண்மைத் தகவல் உண்டு.

80 க்களில்..ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து அகதியாக பல நாடுகள்
சென்ற போது பாரிசும் வந்தார்கள்.


அவர்கள் பெரும்பாலும் சில அனுகூலங்கள் கருதி; ஒரு வீட்டில்
குறைந்தது 5 போராவது சேர்ந்து வாழ்ந்தார்கள்.


இவர்களில் ஈழத்தில் பலபகுதிகளிலும் இருந்து வந்தவர்களாக
இருந்தார்கள்.
பல விதமான பேச்சு வழக்கும்; சொற் புழக்கமும் உடையவராக
இருந்தார்கள்.


அப்போது பகல் வேலைக்குச் சென்று இரவு மாத்திரமே ;குறிப்பாக
நள்ளிரவே சமையல் சாப்பாடு தொடங்கும் வழக்கம் இருந்தது.

அந்த நேரங்களில் தேவையான சமையல் சாமான்கள்; இல்லாதபோது அதைவாங்க இரவு திறந்திருக்கும் கடைகளே ;இந்த வட ஆபிரிக்கர் கடைகள்தான்!

இவர்களிடம் தேவையானவற்றை வாங்க அனுப்பப்படுபவரோ!!
அந்த வீட்டில் இருப்போரில் யார்? கடைசியாக ஊரில் இருந்து
வந்தாரோ! அவரே (எடுபிடி)

அப்போ அந்தப் புதியவர்..ஈழத்தில் வேளைக்கே கடைகள் பூட்டிவதை
மனதில் கொண்டு;"இந்த நேரம் கடை பூட்டியிருக்குமே!! எனக்
கூறினால்..

மற்றவர் " அவன் அடையான்" என அதாவது அவன் பூட்டியிருக்கமாட்டான் என்பதைக் கூற புதிதாக வந்தவர் .

இந்த "அடையான் என்பது ஓர் இனம் எனக் கருதி அதாவது

அல்ஜீரியன் ; துருக்கியன் ; அமெரிக்கன் , ருசியன் என்பதுபோல்

அப்படியே மெள்ள ;மெள்ள இந்தச் சொல் புழக்கத்தில்

வந்ததாகக் கூறுவர்.

ஈழத்தில் பெரும்பாலும் கடை பூட்டுதல் என்பதே!!புழக்கத்தில்
உள்ள சொல்; ஆனால்
மூடுதல்;அடைத்தல்;சாத்துதல் போன்ற சொற்களும்
வெகு;வெகு சொற்பமாகப் புழக்கத்தில் உண்டு.

அகராதியில் கூட மாற்றலாம்; அந்த அளவு பிரான்சில் குறிப்பாக
ஈழத்தமிழர் மத்தியில் இது புழக்கத்தில் உண்டு.

இந்தச் சொற் புழக்கத்தையும்; விபரத்தையும் நீங்கள்

அறிந்துள்ளீர்களா??


உங்கள் பாரிசில் வாழும் உறவினர் நண்பர்கள் கூறக் கேட்டுள்ளீர்கள்ளா??


**படம் ; இங்குள்ள ஓர் "அடையான் கடை" யின் படம்.



46 மறுமொழிகள்:

கானா பிரபா :சொல்வது

சுவாரஸ்மான தகவல், இன்று தான் கேள்விப்படுகின்றேன் அண்ணா

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

பிரபா
இதை உங்கள் நண்பர்களிடம் ;விசாரித்துப் பார்க்கவும்.
"அடையார் " என்றால் என்ன? எனக் கேட்கவும். அவர்கள் என்ன? கூறுகிறார்கள் எனக் கேட்கவும்.
நன்றி

சின்னக்குட்டி :சொல்வது

யோகன்...பாரிஸ் இல் அலஜீரியா நாட்டவர்களை அடையார் என்று நம்மவர்கள் கூறுவதை அறிந்திருக்கிறேன். அதற்குரிய அர்த்தத்தை அறிந்திருககவில்லை.. உங்கள் விள்க்கத்தோடு அறிந்து கொண்டேன் நன்றிகள்..80களில் இறுதியில் பாரிஸ் வந்த போது கண்டேன் studio flat என்ற அடுக்கு மாடியில் சிறிய அறையில் பல பேர் வாழ்வதை..படுக்கிற இடம் கூட சுழற்சி முறையில் இருந்த பரிதாபம். இப்ப நல்லாய் இருப்பார்கள் என்று நினைக்கிறன்... இதை எல்லாம் மறந்து விட்டார்களோ... என்னவோ...

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

சின்னக்குட்டியர்!
அந்தக் காலங்கள் உண்மை! அதற்குப் பல காரணங்கள் இருந்தது. ஆனால் இன்று பெரும்பான்மையானவர்கள் சொந்த வசதியான வீடுகளில் வாழ்கிறார்கள்;இப்போ
புதிதாக வருவோர் கூட ஓர் உறவினருடன் தான் வாழ்தல் எனும் நிலையாகிவிட்டது.
அல்ஜீரியரன்றல்ல..;மொறக்கர்,துனிசியரும் அத்துடன் அவர்கள் வெள்ளைத் தோலுடன்
இருக்கவும் வேண்டும்.இந்த நாட்டவர்களில் கடும் கறுப்பர்களும் உள்ளார்கள்.உங்கள் நண்பர்கள்
இதே காரணம் கூறுகிறார்களா?எனக் கவனிக்கவும்.
நன்றி

வைசா :சொல்வது

நான் இதுவரை தெரிந்து கொள்ளாத நல்ல தகவல்கள். அடையான் கடை என்பதில் ஆரம்பித்து அதுவே இப்போது அடையான், அடைச்சி, அடைப்பெட்டை என்று விருத்தியடைந்திருப்பது வியப்பாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது. :-)).

வைசா

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

வைசா!
உங்களுக்குப் புதிய தகவலா??; தெரிந்தவர்கள் பாரிசில் இருந்தால் கேட்டுப்பார்க்கவும்;
இவர்கள் தொடர்பான சகலதும்; நம் புழக்கத்தில் "அடை" எனும் அடை மொழி தாங்கியே
வரும்.சில காரணகாரியங்கள் வியப்போடு;சிரிப்பூட்டுபவையே!
நன்றி

துளசி கோபால் :சொல்வது

யோகன் ,

இங்கே எங்கூர்லே பெரிய சூப்பர்மார்கெட்டே அடையாரா இருக்கு:-)))))

இங்கெ இருக்கற கொஞ்சக்கூட்டத்துக்கு open 24 hours.

வேணுமா? இது வேணுமான்னேன்?

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

துளசியக்கா!
என்ன? தான் சுப்பமாக்கற் ,அடையாரா? இருந்தாலும்; நாம காரெடுத்தோ;பஸ் செடுத்தோ போக வேண்டும்.உடையுடுத்து,நடை நடந்து போக வேணும்.
இவங்க, "அடையாருக்கு"; மாடியால இறங்கித் தெருவுக்கு வந்தோமா?? அலுவலை முடிச்சோமா?
அடுத்த நிமிசம் வீடு!!
இது ஒரு பெரிய வசதிதான்.!!!

குமரன் (Kumaran) :சொல்வது

அடையார் கடையைப் பற்றி அறிந்து கொண்டேன். நன்றி ஐயா.

இலவசக்கொத்தனார் :சொல்வது

1)ஒரு அடையார் குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தவரைக் கடையடையார் என்பீர்களா?

2)அவர் சென்னையில் அடையார் பகுதியில் ஒரு கடைத் திறந்தால் அப்பொழுது அவர் அடையார்க் கடையடையாராக மாறுவாரா?

3) அதன்பின் அவரை ஒரு பெண் காதலித்து தோல்வியடைந்தால் அந்த பெண் அடையார்க் கடையடையார் அடையார் எனப்படுவாரா?

4) அந்தப் பெண்ணின் இளைய மகன் அடையார்க் கடையடையார் அடையார்க் கடையார் என அறியப் படுவாரா?

சும்மா தமாஸூ!! கோவிச்சுக்காதீங்க. ஏற்கனவே தமிழ்மணத்தில் ஒரே கிறுக்குப் பதிவா படிச்சு இப்படி ஆகிப்போச்சு!! ஹிஹி...

வெற்றி :சொல்வது

யோகன் அண்ணை,
நல்ல பதிவு.
நான் சில வருடங்களுக்கு முன் பாரிஸ் வந்திருந்த போது, பாரிசில் உள்ள Metro[subway] வில் சில இடங்களுக்கு நண்பர்களுடன் சென்று வந்தேன். குறிப்பாக வெள்ளைத் தேவாலயம் போன்ற பகுதிகள். அப்போது என் நண்பர்கள் சொன்னது, "Metro க்களுக்குள்ளை கவனம். அடையார் கொள்ளையடிப்பார்கள்" என்று.
இந்த அடையார் என்று சொல்வது, மொரோக்கோ, அல்ஜீரியா போன்ற நாட்டிலிருந்து வந்தவர்களை, இல்லையா?

அபி அப்பா :சொல்வது

//4) அந்தப் பெண்ணின் இளைய மகன் அடையார்க் கடையடையார் அடையார்க் கடையார் என அறியப் படுவாரா? //

இது தான் கொத்ஸின் கு ம்பு:-)

அபி அப்பா :சொல்வது

அடையார் கடையில் நான் போய் பொருள் கேட்டா அடையார் கடைக்கு போன மடையார். அங்கே அந்த பொருள் இல்லை எனில் அடையார்-கிடையார்...ஸ்ஸ்ஸ்ஸ் கண்ணை கட்டுதே:-))

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

குமரன்!
அறிந்து விட்டீர்கள் தானே!! பாரிஸ் வரும் போது நம்மவர் பேசும் போது "திணறக்கூடாது"
நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

இலவசக் கொத்தனார்!
தங்கள் ஆலோசனைகளை; இச் சொல்லை அகராதியில் சேர்க்கும் போது கணக்கெடுக்கப்படும்.
என்ன?? தமிழ் மணத்தில் கிறுக்கான பதிவா?? நீங்க தமாஷ் பண்ணுறீங்க!ஓ நாய்க்கு கு.க பற்றிச் சொல்லுறீங்களா??
ஆலோசனைக்கும்; அறிவுறுத்தலுக்கும்(கிறுக்குப் பற்றி) மிக்க நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

வெற்றி!
உங்கள் காதிலும் விழுந்துள்ளது.
இந்த வட ஆபிரிக்க நாடுகளான அல்ஜீரியா,மொரக்கோ, துனிசியா போன்ற நாடுகளில் இருந்து ;வந்த ;வந்து கொண்டிருக்கிற; வரப்போகும் யாவருக்குமே!! இதுதான் குறிப்பெயர்.
ஒன்று அவர்களுக்கு தோல் வெள்ளையாக இருக்கவேண்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

அபி அப்பா!
கடுமையாக யோசித்தால்; கண்ணைக் கட்டும்!! எங்களைப் போல இவற்றை இலகுவாக யோசிக்கப் பழகவேண்டும். தமாஷ்!!!
பெரியவங்க சொல்லிட்டாங்க !!நாம கொண்டு நடத்துறோம்.இது வரை சிக்கலில்லை.
நன்றி

Haran :சொல்வது

நல்ல ஒரு தகவல் அண்ணா...

நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

ஹரன்!
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous :சொல்வது

சுவாரஸ்மான தகவல், இன்று தான் கேள்விப்படுகின்றேன் அண்ணா
நன்றி
krishna

Chandravathanaa :சொல்வது

சுவாரஸ்மான தகவல்

வவ்வால் :சொல்வது

யோகன்!
அடையார் என்றால் பகைவன் என்று தமிழ் அகராதி கூறுகிறது . அதே போல் கடலை சென்று சேரும் ஆறு என்ற பொருளில் அடையாரு என்ற ஆறு தமிழகத்தில் சென்னையில் மிக்க மணத்துடன் ஓடுகிறது!

உங்கள் அடையார் வித்தியாசமானது தான் , அடை சுடுவது யாரு என்று புதிதாக ஒரு பொருளையும் சேர்க்த்துக்கொள்ள சொல்லுங்கள்!

நானானி :சொல்வது

நான் ஏதோ சென்னை அடையார் பற்றியோ என்று நினைத்தேன். ஆனால் தகவல்கள் புதியவைகளாக
இருந்தன. மதுரையையும் 'அடையார்' என்று
சொல்லலாம். அதுவும் ஒரு 'தூங்கா
நகரம்'

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

கிருஸ்ணா!
இன்றுதான் கேள்விப்பட்டீர்களா??
பாரிஸ் வந்தால் பயன் படுத்துங்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

சந்திரவதனா!
நீங்கள் இதற்கு முதல் கேள்விப்படவில்லையா?
எனக்கு ஆச்சரியமாக இருக்கு!!

G.Ragavan :சொல்வது

புதிய தகவல் தெரிந்து கொண்டேன் ஐயா.

உங்களை எட்டு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன். கண்டிப்பாக வர வேண்டும்.
http://gragavan.blogspot.com/2007/06/blog-post_23.html

த.அகிலன் :சொல்வது

அடடா புதுத்தகவலா இருக்கே.

Anonymous :சொல்வது

ம். நல்ல சுவாரசியமான தகவல்.
'கடையை அடைத்தல்' என்பது மிகச்சிறியவில் என்றில்லை; பெருமளவில் பயன்படுத்தப்படும் சொல்தான். தமிழகத்திலும் கடை மூடும் போராட்டத்தைக் குறிக்கும் 'கடையடைப்பு' என்ற சொல் மிக அதிகளவில் புழக்கத்திலுண்டு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

ராகவா!
புதிய தகவல், அத்துடன் பாரிஸ் வந்தால் பயனுள்ளதகவல்.
என்ன? எட்டுவிளையாட்டா?எனக்கெல்லாம் விளையாடும்
வயதா??
மயன் என்னும் பதிவரும் கூப்பிட்டார்.
பார்ப்போம்

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

Delphine!
Of course, some time unexpectily,some interesting things
happen in life.
Thanks for reading and comments.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

அகிலன்!
புதிது மாத்திரமல்ல, புழக்கத்திலும் உள்ள தகவல்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

வவ்வால்!
அடடா?? என்ன பொருத்தம்- அடையார் என்றால் பகைவர் எனும் பொருளுமுண்டெனில்....இவர்களில் சிலர், பலருக்குப் பகைவரே!! காரணம்
முடிச்சு மாறிகளாக உள்ளார்கள்.

சென்னை அடையாறு பார்த்துள்ளேன்.
பேச்சு,எழுத்திலும் மிகக் கேள்விப்பட்ட
சொல்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

நானானி!
ஒங்க அடையாறை நினைச்சு வந்தீங்களா? எங்க அடையார் எப்படி?
மதுரை தூங்காநகராக இருப்பதில் ஆச்சரியமில்லை.
மீன் போல் மூடாத கண்களையுடைய
மீனாட்சியின் அருளாட்சியுடைய ஊரில்
இரவிலும் பயமில்லைப் போலும்.
அவள் விழிப்பாக இருப்பதால்!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

வசந்தன்!
இது தமிழகத்தில் மிகக் புழக்கத்தில் உள்ள சொல், ஆனால் ஈழத்தில் நான் பழகிய பகுதிகளில் இச்சொல்லைவிட பூட்டுதல் என்பதே மிகப் புழக்கத்தில் இருந்தது.
"கடை பூட்டமுன் ஓடிப்போய் வாங்கிவா?"
"எல்லோரும் கடையப் பூட்டிப்போட்டு
நடையக் கட்டுங்க!"

மலையக தமிழ் சகோதரர்கள் , இந்த
அடைத்தலையே புழங்கினார்கள். அதை நேரே கேட்டுள்ளேன்.
ஆனால் இன்று தமிழகமோ,ஈழமோ
கடையடைப்பு என்பதை எழுத்துக்கு
உபயோகிக்கிறது.
இந்தப் போராட்டங்களே புதிது தானே!!
அதனால் புதிய புழக்கங்கள்...

ramachandranusha(உஷா) :சொல்வது

யோகன், நானும் "நம்ம ஏரியா" என்று நினைத்தே வந்தேன். சுவாரசியமான தகவல்கள்,வவ்வால் அவர்கள் சொன்ன
பொருளும் வெகு பொருத்தமாய் உள்ளதே!!!
இன்றும் எங்கள் வீட்டு அருகில் ஓடும் அடையாற்றில் துணி தோய்ப்பவர்கள் உண்டு. (சைதை பாலம் அருகில்)

Sud Gopal :சொல்வது

அடையார் கடையைப் பற்றி அறிந்து கொண்டேன்.சுவாரசியமான தகவல் தான்.

வல்லிசிம்ஹன் :சொல்வது

இதுநாள் வரை அடையார்,அடையார் என்ற பொருளில்தான் புரிந்து வந்தேன்.
மிகச் சுவாரஸ்யமான பதிவு.யோகன்,.

ஒரு வார்த்தையில் இவ்வளவு தகவலா.
அருமை.
நீங்கள் இப்படி வந்தவர்கள் நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறார்கள் என்று கேட்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பாரதிய நவீன இளவரசன் :சொல்வது

useful info; nice blog.

நானானி :சொல்வது

மீனாட்சியின் அருளாட்சியிலிருக்கும்
தூங்கா நகருக்கு அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்!
யோகன் பாரிஸ்!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

//வவ்வால் அவர்கள் சொன்ன
பொருளும் வெகு பொருத்தமாய் உள்ளதே!!!//

உஷா!!
இந்த வவ்வால் சொன்ன விடயப் பொருத்தம் எனக்கு ஆச்சரியம் தந்தது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

சுதர்சன் கோபால்!
இது எதிர்பார்க்கா??இப்படி ஆகும் என அறியா??சுவாரசியமான தகவல்!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

//நீங்கள் இப்படி வந்தவர்கள் நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறார்கள் என்று கேட்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. //

வல்லி சிம்ஹன்!
இந்தச் சந்ததியில் இருந்து வந்த RACIDA DATI(42) ,இப்போது பிரான்சின் நீதி அமைச்சராகவுள்ளார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

//useful info; nice blog. //

பாரதிய நவீன இளவரசன்!
பாரிஸ் வந்தால் பயன் படுத்துங்கள்.
தளம் நன்றாக இருக்கா?
நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

//தூங்கா நகருக்கு அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்!//

நானானி!
விளக்கம் பிடித்ததா?நன்று!!

Anonymous :சொல்வது

very interesting..

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

தூயா!
இப்படித் தான் விபத்தாக சுவையான சம்பவங்கள் உருவாகின்றன.
எவரும் இந்தளவு ஆகுமென நினைக்கவில்லை.