மகா கவி பாரதி 125 ம் ஆண்டு விழா...பாரிஸ்
பாரிசில் மகா கவி பாரதியாரின் 125 ம் ஆண்டு நிறைவு விழா ,
சென்ற 4 நவம்பர் 2007, ஞாயிறு அன்று பிரான்சுத் தமி்ழ்ச்
சங்கத்தினருடன்; பிரான்சில் இயங்கும் வேறு பல தமி்ழ் சமூக
பண்பாட்டுச் சங்கங்களின் அனுசரணையுடன்...தமி்ழகத்திலிருந்து
அறிஞர்கள்; கலைஞர்கள் வருகையுடன்; உள்ளூர் அறிஞர்கள்;
வளரும் கலைஞர்கள் நிகழ்ச்சியோடு வெகு விமரிசையாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் இனிதே!! நிறைவெய்தியது.
இந்த 125 ஆவது பாரதி பிறந்த தினம் ,உலகிலேயே பாரிசில் தான் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டார்கள்.
இவ்விழா இந்தியத் தூதுவர் திரு ரஞ்சன் மத்தை தலைமையில் நடைபெற்றது.
புதுவையில் இருந்து முன்னாள் கல்விஅமைச்சர் திருமதி ரேணுகா அப்பாத்துரை அழைக்கப்பட்டு;; "பாரதிகண்ட புதுமைப் பெண்" விருது
வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
உலகத் தமிழர் பேரவை திரு. இரா. சனார்த்தனம் அவர்களும் கலந்து
கொண்டார்கள்.
சென்னை வானொலிக் கலைஞர் "இளசை சுந்தரம்" அவர்கள்.."பாரதி இன்றிருந்தால்" எனும் நிகழ்ச்சி, நகைச்சுவையுடன் அமைந்து; பார்வையாளர்களைக் கவர்ந்தது.
பிரன்சுத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. தசரதன் பேசுகிறார்
அவர்கள் பாரதியார் பாடல்களுக்கு நடமாடினார். ஒரு மணி நேரம் நடந்த
இந்த நிகழ்ச்சி கண்ணுக்கு நல்விருந்து...
வெகு நாட்களின் பின் ஒரு அருமையான பரத நாட்டியம் பார்க்கக் கிடைத்தது.
இதை ஏற்பாடு செய்த விழாக் குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அமைச்சர் ரேணுகா கூட வெகுவாக நடன தாரகையைப் புகழ்ந்தார்.
அத்துடன் பாரிசில் நடனம் பயிலும் ; நம்மவர் பிள்ளைகளின் பாடல்;
பாரிசில் தமிழ் பயிலும் மலேசியப் மாணவி கதரின், பிரன்சு மாணவன் நிக்கோலா
இந்த விழாவில் என்னை மி்கக் கவர்ந்தது. பாரிஸ் பல்கலைக்
இறுதி நிகழ்வாக புதுவை பல்கலைக் கழக தலைக் கோல் ஆறுமுகம் அவர்கள்,பாஞ்சாலி துகிலுரி படலம் "தெருக் கூத்து" இடம் பெற்றது.
இது தனி நபர் நிகழ்வு
உணவு பரிமாறப்படுகிறது.....
மதியம் ;பாரிஸ் கம்பன் கழகத்தின் சார்பில் வந்த அனைவருக்கும் சுவையான உணவு வழங்கினார்கள்
மிக உணர்வுடன் உரை ஆற்ற முற்பட்ட வழக்கறிஞர் திரு.ரவி(சென்னை)
அன்றைய நிகழ்வுகளைக் படங்களுடன்; காணொளியாகவும் தந்துள்ளேன்.
என் மி்கச் சிறிய கருவியால்; தெளிவான படங்கள் எடுக்க முடியவில்லை.
மன்னிக்கவும்.
இவ்வளவு சிறப்பான விழாவிலும் மனதுக்கு நெருடலான விடயம்; பல உள்ளூர்ப் பேச்சாளர்களுக்கு இடம் கொடுத்து; நேரத்தை வீணடித்து; தமி்ழகத்தில் இருந்து வருகை தந்தவர்களுக்கு போதிய நேரமி்ன்றி; 5;10 என நிமி்டங்கள் கொடுத்து ஏமாற்றியது.
நான் எதிர் பார்த்த தமி்ழருவி மணியன் அவர்கள் விழாவுக்கு வரவில்லை.
மிகப் பெரிய ஏமாற்றம்.
எல்லோருக்கும் மேடையில் பேச இடம் கொடுத்தல்; எல்லோருக்கும் பொன்னாடை என்பதை இனிவரும் காலத்திலாவது தவிர்த்தல்; மி்கச் சிறப்பு.
அத்துடன் இச்சங்கங்களில் அங்கத்தவர்கள் கூட ;தலைவர்களையோ நிர்வாகத்தினரையோ..;மேடையில் பேச இடம் தரும்படி இனி வரும் காலங்களில் நிர்பந்தப்படுத்தாமலும்; கேட்டால் கூட போதிய நேரமில்லையெனில் மறுத்தும் இவ்விழாக்கள் இன்னும் குறைந்த நேரத்தில் ;மேலும் சிறப்பாக , தமி்ழகத்தில் இருந்து வரும் பேச்சையே தொழிலாக உள்ள அறிஞர்களின் சிறந்த உரைகளால் நிரம்ப உதவுவார்கள் என நம்புவோம்.
அத்துடன் நிர்வாகத்தினரும் நேரத்தைக் கணக்கில் கொண்டு, பேசுவோர் எண்ணிக்கையை அமைத்தால்.....மிக அருமையாகப் பேசிய சென்னை வழக்கறிஞர் ரவி....’நான் இன்னும் எவ்வளவு நேரம் பேச’ என்று மேடையில் இருந்தே கேட்கும் அவலம் வந்திராது. ‘பாரதியின் அறிவுரை பற்றிப் பேச வந்தவர்.’எனக்கு முன் எல்லோரும் பேசிவிட்டார்கள் எனக் கூறி....இனி நான் என்ன??? பேச என்று சொல்லி இருக்கும் நிலையும் வந்திருக்காது.
இனிவரும் காலத்திலாவது,காலத்தின் அருமையைக் கருத்தில் கொண்டு
உரைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, தமிழகமிருந்து வரும் பேச்சாளர்களுக்குப் போதிய நேரம், கலை நிகழ்ச்சிகளிலும் வருகை தந்தோருக்கு முக்கியம் எனக் கொண்டால் இந்த விழாக்களால் பயன் உண்டு.
மேடையில் ஏறி அத்தனை பேருக்கும் வணக்கம் கூறி விட்டு இறங்கும் அவலம் இனி வேண்டாம்.
இதையே பலர் விரும்புகிறார்கள். உரியவர்கள் கவனிப்பார்கள் என நம்புவோம்.
9 மறுமொழிகள்:
அண்ணா அண்மை காலமாக பாரிஸ்லில் தமிழ் விழாக்கள் கூடுதலாக நடைபெறுவதை அறிய முடிகின்றது மிக்க மகிழச்சி.
(இந்த 125 ஆவது பாரதி பிறந்த தினம் ,உலகிலேயே பாரிசில் தான் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டார்கள்.)
இந்தியாவில் நடைபெறவில்லையா? நான் அறியவில்லை அதுதான் கேட்டேன்.
இரெண்டு!!! பாரதி 125 பிரான்ஸ் விழாவிற்கு முன்பு என்னென்ன கூத்துகள் தில்லுமுல்லுகள் தள்ளுமுள்ளுகள் நடந்தன என்பதனை இங்கு சென்று கண்டு களிப்பீர் அன்பர்களே...
http://www.bharathy125france.com/
//பாரிஸ் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. தசரதன் பேசுகிறார்//
தவறு. அவர் பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தலைவர்.
யோகன் அண்ணா பதிவிற்கு நன்றி தமிழருவி மணியன் அவர்களிற்கு திங்கட் கிழைமைதான் பிரான்சிற்கான விசா கிடைத்ததாம் அதனால் வரமுடியாது போய் விட்டதாக அறிந்தேன்
தாசன்!!
//அண்ணா அண்மை காலமாக பாரிஸ்லில் தமிழ் விழாக்கள் கூடுதலாக நடைபெறுவதை அறிய முடிகின்றது மிக்க மகிழச்சி.//
எனக்குக் கூட இவை ஆச்சரியமும், விடை தெரியா விடயங்களுமே!!
எனினும் நடப்பது நல்லது...நடக்கட்டும்.
இந்த 125 ஆண்டு விழா...வேறு எங்குமே நடக்கவில்லை. இந்தியாவில் கூட நடக்கவில்லை என மேடையிலும் ஒருவர் குறிப்பிட்டார்.
தெரியாமல் கூறியிருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.
காஞ்சி!
தமிழரென்றால் தில்லுமுல்லு,தள்ளுமுள்ளு இல்லாமல் இருக்குமா??
அதை ஓரளவு விழாவில் புரிந்து கொண்டேன்.
அந்த அளவுக்குப் பொன்னாடை போர்த்தி மூடினார்கள்.
எனினும் விமர்சிப்பது எளிது, இப்படி
ஒரு விழா ஒழுங்கு செய்வது இலகுவல்ல..
அதற்காக எல்லாவற்றையும் பொறுக்கலாம்.
கால ஓட்டத்தில் யாவும் மாறும்..
//பாரிஸ் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. தசரதன் பேசுகிறார்//
தவறு. அவர் பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தலைவர்.
மாற்றி விட்டேன்.
சாஸ்திரி!
இந்தியத் தூதர் தலைமை தாங்கிய விழாவுக்கு வரும் சிறப்பு விருந்தினர்,பேச்சாளருக்கு, ஒரு நாள்
கழித்து விசா வழங்கிய , பிரஞ்சுத் தூதரகத்தை வாழ்த்துவோம், போற்றுவோம்.
அவர் வந்தாலும் சிலசமயம் 10 நிமிடம் தான் பேசக் கிடைத்திருக்குமோ?..
https://rtirajamuthu.blogspot.com/2021/12/1919-26.html
உங்கள் கருத்துக்கு