Old is Gold
அதைப் பணம் பண்ணுவதிலும் விண்ணர்கள்.
இங்கு சாதாரணமாக வீடுகளில் உள்ள பொருட்களுகே!!!
நூற்றாண்டுக் கணக்கில் வயது சொல்லுவார்கள்.
இவர்கள் சிலை ;ஓவியம் என்றல்ல !!!எதையும் பழசானால்
பேணுகிறார்கள்; அதைப் பணமாகிறார்கள்.
பழம் பொருள் அங்காடி இங்கே செல்வம் கொழிக்கும்
ஓர் தொழில்!!!!; இதில் பலர் ஈடுபட்டு செல்வச் சீமானாகவும்;
உலக நாடுகளையே வலம் வந்தவர்களாகவும் உள்ளது ;
கண்கூடு.
இத் தொழிலில் யூதர்கள் மிகவும் அதிகமாக உள்ளார்கள்.
கச்சிதமாகப் பணம் பண்ணுகிறார்கள்.
குடும்பமே இக்கலையில் கரைகண்டவர்களாக இருக்கிறார்கள்.
நம்பகக் கஸ்ரம் ஓர் சிலை பற்றிய விளக்கம் என் மனைவிக்குக் கூறிய பையனின் வயது 9.
சிலை;ஓவியம்;நகை;உடை; இசைத்தட்டு;முத்திரை;
உலோகப் பொருட்கள்; மரத் தளபாடங்கள்;கருவிகள்;
கண்ணாடிப் பொருட்கள்;பீங்கான் பொருட்கள் என
5 கண்டத்திலுள்ள
அனைத்தையும் ஒரே இடத்தில் குவிப்பார்கள்.
இத்தடவை பார்த்ததில் இந்தியப் பொருட்கள்
மிகக் குறைவு.
இங்கு வந்த காலம் முதல் இதை பார்க்க வருடாவருடம் செல்வேன்; இம் முறை என் குட்டி NIKON உடன் சென்றேன்.
வாத்சாயனரின் சூத்திரங்களை யானைத் தந்தத்தில் யப்பானியர் வடித்த உள்ளங்கையளவு சிலைகள்(இந்த சுளகும் தானியமும் எலியும் போல்) ; தணிக்கை கருதிப் பிரசுரிக்கவில்லை.
சிலர் படம் பிடிக்க அனுமதிக்கவில்லை. பலர் அன்புடன் விளக்கமும் தந்து படமும் பிடிக்க விட்டார்கள்.
நான் எப் பொருளையும் வாங்கக் கூடியவனில்லை என்பது தெரிந்தும்.இங்குள்ள பொருள்களில் மிகவிலை குறைந்ததே!!! 50 யூரோக்கள்........
ஒரு கரண்டி கிடைக்கும் அந்த விலைக்கு....!!!!
இவற்றை ஒருங்கே ஓர் இடத்தில் பார்ப்பதே எனக்கின்பம்!!!!பார்த்து ரசித்தேன்.
படமும் பிடித்தேன் உங்களுக்காக...