இந்தியாவில் எப்படி ? அழைப்பீர்கள்!!!!!

Unknown Vegetable

மலை நாடரின்...இப்படி இருந்த நான் எப்படி ஆனேன்..பதிவைப் பார்த்தபின்பு
அவர் படம் போட்டுள்ள மரக்கறியின் பெயரைத் தேடிச் சென்ற போது;
இந்தப் படம் வந்தது.

அதில் இதற்குப் பெயர் தெரியாது எனப் போட்டுள்ளது.
இதை ஈழத்தில் கருக்குப்பிசுக்கு என்போம்; கருக்குள்ளதால்; இதைப் போல்
இன்னும் ஒன்று மேற்பாகம் வழு வழு என இருக்கும் அதைப் "பாற்பிசுக்கு"
என்போம்.

இதை இந்தியாவில் எப்படி? அழைப்பீர்கள்...
இதன் தாவரவியல் பெயர்...ஆங்கிலப் பெயரைக் குறிப்பிட முடியுமா???

30 மறுமொழிகள்:

SHIVAS :சொல்வது

பீர்கங்காய் என்றே இதனை அழைப்போம் அன்பரே. விஞ்ஞானப் பெயர் கிடைத்தால் தருகிறேன்.

ஆதிபகவன் :சொல்வது

தமிழில் பீர்க்கங்காய் என அழைப்பார்கள். ஆங்கிலத்தில் இதன் பெயர் Ridgeguard.சிங்களத்தில் வெடகுளு (Wetakulu) என்பார்கள்.

இது உடம்புக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. பித்ததிற்க்கு மிகவும் நல்லது. இதன் தோலை சீவி, எண்ணயில் வதக்கி துவையல் அரைப்பார்கள்.

வவ்வால் :சொல்வது

யோகன் ,

அறிவியல் பெயர் "Luffa acutangula" ,ridge gourd என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், தமிழில் பீர்க்கன்காய்!

sponge gourd என்று சொல்வதும் இதைத்தான் என நினைக்கிறேன்.

SHIVAS :சொல்வது

ஆங்கிலத்தில் இதன் பெயர் Ridged gourd

விஞ்ஞானப் பெயர் Luffa acutangula

மேலும் பல அறிய விவரங்களுக்கு இங்கு சென்று பார்க்கவும்:

http://www.asiafood.org/glossary_1.cfm?alpha=R&wordid=3268&startno=27&endno=51

கலை :சொல்வது

Luffa acutangula - கருக்குப்பிசுக்கு

Luffa aegyptiaca - பாற்பிசுக்கு

Luffa operculata இப்படி ஒரு வகைதான். உணவாகப் பாவிப்பதில்லை. ஆனால் உள்ளே sponge மாதிரி இருக்கும். அதை எடுத்து காய வைத்த பின்னர், தோலில் அழுக்கு அகற்ற பயன்படுத்துவார்கள்.

இந்த தகவல் சரியானதென்றே நினைக்கின்றேன். :)

வவ்வால் :சொல்வது

யோகன்,

பீர்க்கன் காயில் ஒரு சமையல் குறிப்பை நம்ம ராகவன் அவர்கள் போட்டுள்ளார் ,அதையும் ஒரு முறை பாருங்கள், முடிந்தால் சமைத்தும் பாருங்கள்!(சாப்பிட்டு பாருங்கள் என்று நான் சொல்ல மாட்டேன் :-)) )

http://adupadi.blogspot.com/2005/12/blog-post_01.html

குமரன் (Kumaran) :சொல்வது

யோகன் ஐயா. இந்தக் காயை எங்கள் வீட்டில் அடிக்கடி சமைப்பார்கள். இதற்குப் பெயர் பீர்க்கங்காய் என்று என் மனைவி சொல்கிறார்.

SHIVAS :சொல்வது

பீர்க்கங்காய் துவையல்

http://adupadi.blogspot.com/2005/12/blog-post_01.html

Anonymous :சொல்வது

பீர்க்கங்காயை , காய்ந்த மிளகாய், உப்பு போட்டு எண்ணெயில் வதக்கி பிறகு முட்டையை உடைத்துப் போட்டு நன்றாக பொறித்தால் மிகவும் சுவையான பொறியல் தயார்

ஆயில்யன் :சொல்வது

பீர்க்கங்காய் சட்னி + சூடான இட்லி வைச்சா எண்ணிக்கையில்லாம தின்னுவேன் நான் இங்க இட்லிக்கு வழியில்ல(கருங்கல்லாட்டம் கொடுக்கறான் மல்லு!)

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

காஞ்சி!
பீர்க்கங்காய் எனும் சொல் இப்போ ஞாபகம் வந்தது.
ஆனால் ஏன்? ஈழத்தில் சில பகுதிகளில் இதைப் 'பிசுக்கு'என்றார்கள் எனப் புரியவில்லை.
என் அறிவுக்கெட்டியவரை எங்கள்
சந்தையில் இது விற்று நான் காணவில்லை. ஆனால் தோட்டவேலிகளில் தானே படரும்.
பூக்கும் காய்க்கும்....பின் காய்ந்தும் போகும்,,,கவனிப்பார் இல்லாத காய்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

ஆதிபகவன்!!!
மிக நல்ல தகவல்கள் தந்துள்ளீர்.
ஆனால் இதைச் சமையல் செய்ததாகத் தெரியவில்லை.
இந்த துவையல் என்பது நம் சமையலில் இல்லாதது.
இக்காய் தேடுவார் அற்றுக் கிடந்து காய்ந்து பின் இளமையில் கிலுகிலுப்பையாக விதையுடன் கூடிய
காய்ந்த காயை விளையாடியது. ஞாபகம் இருக்கிறது.

வி. ஜெ. சந்திரன் :சொல்வது

பீர்க்கங்காய் என்றும் ஈழத்தில் சொல்லுவதுண்டு, எழுதும் போது அப்படி தான். பேச்சுவழக்கில் மட்டும் தான் பிசுக்கங்காய்

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

வவ்வால்!!
மலைநாடரால் இன்று ஒரு தெளிவு!!
ஆனால் இதை ஏன் ? பிசுக்கு என்று எங்கள் ஈழத்தில் அழைத்தார்கள் எனப் புரியவில்லை.
பீர்க்கு=பிசுக்கு என மருவி விட்டதா??
மேலும்!
இது காய்ந்ததும் உடலுக்கு ஊத்தை தேய்க்க மிருதுவாக இருப்பதால் பயன் படுத்துவர். அதனால் sponge gourd
என்பது பொருத்தமே!!
சட்டி பானை உரஞ்சப் 'பொச்சு', உடம்புக்குரஞ்சப் 'sponge' ..பொருத்தமான சொல்லுகள் தான்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

கலை!!
உங்கள் தகவல்கள் மிகச்சரி..
எங்கள் வீட்டிலும் இந்தத் தும்பு ,உடலுளக்க உபயோகித்துள்ளோம்.
இதே வேளை இதன் காய்த காய், உள்ளுள்ள விதைகளால் ஒலி எழுப்பும்
இளமையில் கிலுக்கி விளையாடியுள்ளேன்.
நீங்கள் ஈழமா??? இந்த கருக்குப்பிசுக்கு, பாற்பிசுக்கு
சரியாகப் பிடித்துள்ளீர்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

வவ்வால்!
ராகவனின் சமையல் குறிப்பு பார்த்தேன். இப்போது தான் இது என்ன காயெனவே தெரிந்தேன். இனித் தேடி, சமைத்து...
பார்ப்போம்...
அவரைப் படம் போடும் படி கேட்டுள்ளேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

குமரா!!
நீங்கள் அடிக்கடி சமைக்கும் இந்தக் காய் தெரிந்தும், இதெனத் தெரியாது
இருந்துள்ளேன்.
ஆனால் ஈழத்தில் இது தேடுவாரற்றுக் காயும்...

காய்ந்த தும்பு, நல்ல கிறீம் நிறத்தில் இருக்கும், உடம்பு தேய்த்துக் குளிக்க
மென்மையாக இருக்கும்.
அதுக்கே பயன்பட்டது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

காஞ்சி, அனானி !
சமையல் குறிப்பெல்லாம் தந்துள்ளீர்கள்.
முதல் இந்தக் காயைப் பாரிசில் தேட வேண்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

//(கருங்கல்லாட்டம் கொடுக்கறான் மல்லு!)//

ஆயில்யன்!
வீட்டு விலாசம் தாருங்கள், பெண் பார்க்கக் கூறி விடுகிறேன்.
பூப்போல இட்லி சாப்பிட...

அட பீர்க்கங்காய் சட்னி..அப்பிடியும்
உண்டா??

மலைநாடான் :சொல்வது

யோகன்!

இந்தப் பிசுக்கு, பீர்க்கிலிருந்து வந்ததுவே. ஈழத்தில் இது சமைப்பதிலும் பார்க்க விளையாட்டுக்கும், உடம்பு தேய்க்கப் பயன் பட்டதென்பதும் சரியே. ஆனால் சில ஏழைபாழைகளின் வீட்டில்,இலவச வேலி விநியோகமாகக் கிடைக்குமிவை, சுவையான பால்க்கறியாகப் பசி தீர்க்கும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அழகுக்க குறிப்புத் தருபவர்களின் சொல்லழகில் இது வெள்ளரிக்காயாக வந்த மயக்கத்தில் எனது இடுகையில் வெள்ளரிக்காயென்டு எழுதிவிட்டேன். அதற்காக ஒரு விசாரணைக் கமிட்டி வைத்து கூட்டம் கூடிநிக்கிறியள்.:)

இதெல்லாம் ரொம்ப ஓவர்:)

ஆனா பல தகல்வகள் கிடைத்தன என்பது உண்மை.

செல்லி :சொல்வது

எங்கட வீட்டில பீர்க்கங்காயில் பால்க் கறி, சொதி என்பன சமைப்பதுண்டு. நல்ல ருசியாயிருக்கும்.

இங்கே சீனரின் கடைகளில் கிடைக்கிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

சந்திரன்!
நீங்கள் குறிப்பிட்டது; மி்கச்சரி....பிசுக்காக மருவி விட்டது.
அதிக பயன் பாட்டில் இல்லாததாலும்; பீர்க்கங்காய் என்பதே
எனக்கு மறக்கும் படி ஆனது; நான் வீட்டில் சமையலை அவதானிக்கத்
தொடங்கிய காலக்கட்டத்தில்;சமைத்ததாக ஞாபகம் இல்லை.
சாப்பிட்ட ஞாபகமும் இல்லை.

Anonymous :சொல்வது

பீர்க்கு மருவி பிசுக்கானது.

எண்டாலும் மலைநாடாரைப் போட்டு உப்பிடி வறுக்கக்கூடாது.

//ஆனால் ஈழத்தில் இது தேடுவாரற்றுக் காயும்...//

காய்க்குமெண்டு சொல்லவந்தியளோ?

Unknown :சொல்வது

யம்மாடி, பீர்க்கங்காய்க்கு இவ்வளவு தகவல்களா? எங்கள் வீட்டு வேலியில் (ஒரு காலத்தில்) வளர்ந்து கிடக்கும்.

அசைவப் பிரியர்களுக்கு:

பீர்க்கங்காயும், இறாலும் கூட்டில் சேர்ந்தால் சுவை அருமையாக இருக்கும்!!

வேலியில் கிடைக்கும் மற்றவை:

முசுமுசுக்கை - அடைக்கு அருமை!
பிரண்டை - துவையல் (கொழுந்து மட்டும்)
முள்முருங்கை - அடை (இலை மட்டும்)
வாளரங்காய் - கொத்தவரை மாதிரி (குழம்புக்கு)
கோவைக்காய் - கூட்டுக்கு (அமெரிக்காவில்தான் இதன் அருமை தெரிந்தேன்)

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

மலைநாடர்!
//சுவையான பால்க்கறியாகப் பசி தீர்க்கும்.//

செல்லி கூட பாற்கறி பற்றிக் கூறியுள்ளார். இனித் தான் தேடி
சமைக்க வேண்டும்.
//அதற்காக ஒரு விசாரணைக் கமிட்டி வைத்து கூட்டம் கூடிநிக்கிறியள்.:)//

இந்த விசாரணை எவ்வளவு , விசயத்தை தந்துள்ளது.
இல்லையோ நான் 'பீர்க்கை' அறியாமல் பிசுக்குடனே , வாழ்ந்து போயிருப்பேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

செல்லி!
நீங்கள் அவுஸ்ரேலியாவில் சமைப்பதைக் குறிப்பிடுகிறீர்களா??
அல்லது ஈழத்தில் சமைத்ததைக் குறிப்பிடுகிறீர்களா???
நான் ஈழத்தில் சாப்பிட வில்லை.
சீன,வீயட்னாம் கடைகளில் கிடைக்கலாம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

அனானி!
இந்த வறுவலில் எவ்வளவு விசயம் தெளிவாகியுள்ளது.

//காய்க்குமெண்டு சொல்லவந்தியளோ?//

இல்லையில்லை. 'காயும்'என்றே சொன்னேன்.
ஏனேனில் இதைப் பெரிதாககத் தேடிச்
சமைக்காததால் அது தானே முளைத்து
தானே வளர்த்து,காய்த்து.....யாருமே
சீண்டாமல் காயும்.

பின் முதுகு தேக்க அதன் தும்பு உதவும்.

கலை :சொல்வது

ஓம். நான் ஈழம்தான். ஆனால் கருக்கு பிசுக்கு, பாற்பிசுக்கு என்ற பெயர்கள் மேற்படி உங்கள் பதிவிலிருந்தே எடுத்துப் போட்டேன். :)

அவற்றை நான் பீர்க்கங்காய் என்றே கேள்விப்பட்டிருக்கின்றேன். உங்கள் பதிவிலிருந்த படங்கள், விளக்கங்களைப் பார்த்து விட்டு, அதற்குரிய தாவரவியற் பெயரை எடுத்துப் போட்டேன். :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

கலை!
அட,நீங்கள் கூட பீர்க்கங்காய் எனத் தான் கேள்விப்பட்டுள்ளீர்கள்.
சகலரும் தந்த தகவலைக் கொண்டு
ஒருதடவை புகுந்து வந்து விட்டேன்.
கொட்டிக் கிடந்தது தகவல்.
இனிமேல் கருக்குப்பீர்க்கு, பாற்பீர்க்கு எனக் குறிப்பிடலாம்.

நம் 'ஓம்' விடவே வேண்டாம். அறியாமலே எந் நாளும் பிரணவத்தை உச்சரிக்கிறோம்.
நன்று தானே..

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

தஞ்சாவூரான்!
இந்தப் பீர்க்கில் இவ்வளவு விசயமிருக்க தீண்டாதிருந்து விட்டோமே என வருத்தமாக இருக்கிறது.

நீங்கள் குறிப்பிட்டவற்றில் முசுமுசுக்கை,வாளாரங்காய் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை.

அத்துடன் அடை என்னும் சாப்பாடும்
தெரியவில்லை.

முள்முருக்கில் அடைசெய்வது சாப்பிடுவதென்பது உங்கள் மூலம் அறிந்தேன்.

கோவைக்காய் எங்கள் வீட்டு அடுப்படிக்கு வந்ததில்லை, ஆனால் சிறுவயதில் கோவைப்பழம் பறித்துச் சாப்பிட்டுள்ளேன்.
இங்கே சில புதுவை அன்பர்கள் கடையில் கண்டுள்ளேன்.