காளான் விலை 150,000 யூரோ- மயக்கம் போட வேண்டாம்


கடந்த 50 வருடங்களில் முதற் தடவையாக இந்த 1.5 கிலோ எடையுடைய வெள்ளை

Truffe வகைக் காளானை இத்தாலியில் எடுத்துள்ளார்கள்.

இதன் விலை ஏலத்தில் ஒன்றரை இலட்சம் ஈரோக்கள் விலை போனதாக தொலைக் காட்சியில் கூறினார்கள்.


காளான் வகையில் நிலத்துக்கடியில் கிடைக்கும் இவ்வகைக் காளான்கள், விலை மிக அதிகமானவை. இவற்றில் கறுப்பும் , 2 ம் படத்தில் உள்ளதுபோலும் உண்டு. இவை விலை குறைந்தவை. கிலோ 3 ஆயிரம் ஈரோவரை விற்பார்கள்.




இவை பிரன்சில் chenes, ஆங்கிலத்தில் oak எனவும் தமிழில் சிந்தூரம் என கூறப்படும்


மரத்தின் வேரிலிருந்து உருவாகிறது.


இதை நன்கு பயிற்றப்பட்ட நாய்,பன்றி அத்துடன் சில வகை இலையானின் நடமாட்டத்தையும் வைத்து, நிலத்துள் இருப்பதைக் கண்டுபிடித் தெடுப்பார்கள்.


ஐரோப்பிய சமையலில் இதன் பங்கு உண்டு. பணம் படைத்தோரின் உணவு..விலையைப்பார்த்துப் புரிந்திருப்பீர்கள். குளிர்காலத்தில் இதைத் தேடுவது அதிகம். வாராந்த காளான் சந்தையில் இவை விலை பேசப்படும்


இந்த வகைக் காளான் எடுக்கும் விதத்தை அந்த தொலைக்காட்சிச் செய்தியுடன் பார்க்க

http://videos.tf1.fr/video/news/insolite/0,,3636356,00-truffe-blanche-decouverte-italie-.html">இங்கே/a>>

4 மறுமொழிகள்:

துளசி கோபால் :சொல்வது

தகவல் புதுசு.

நன்றி யோகன்.

கலை :சொல்வது

காளான் தேடப் போகும் அல்லது சேகரிக்கப் போகும் ஆட்கள் ஒன்றாகச் சேர்ந்து 'காளான் சங்கம்' வைத்திருக்கிறார்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

துளசியக்கா!
இப்படி ஒரு காளான் உள்ளதே!,இப்போ தான் அறிந்தீர்களா?? உங்க பக்கம் இந்த மரம் இருக்குமே?

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

கலை!
ஐரோப்பியா, அமெரிக்காவில்..'குறட்டை விடுவோர் சங்கமெனவே' உண்டு.இவ்வளவு பணப்புளக்கமுள்ள
இந்தக் காளானுக்கு சங்கமில்லாமல் இருக்குமா?