அபூர்வ படங்கள்!! கிளைப் பனையும்; கிளைத் தென்னையும்...

லங்கையில் வடபகுதியில் உள்ள தீவுக் கூட்டத்தில் நெடுந்தீவில் இப்படி கிளையுடன் உள்ள பனையின் படம் பார்த்துள்ளேன்.
ஆனால் இந்தப் பனை எங்கே ? உள்ளது,எப்போ பிடித்த படம் எனும் விபரம் தமிழ்நாதத்தில் தரப்படவில்லை.






இந்தத் செவ்விளநீர்த் தென்னை ,இலங்கையில் புத்தளம் மாவட்டத்திலுள்ள கற்பிட்டி எனும் கிராமத்தில்( கொழும்பிலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர்)உள்ளது. இப்படம் அங்கு சென்ற என் நண்பர் ஒருவரால் எடுக்கப்பட்டது.





தமிழக நண்பர்களே!!! இந்தியாவில் இப்படி? உண்டா??

****தமிழ்நாதத்திற்கும்; நண்பருக்கும் நன்றி

48 மறுமொழிகள்:

மாயா :சொல்வது

ஒரு மாதிரி கிளைப்பனையோட படம எடுத்திட்டீயள்
வாழ்த்துக்கள்

நானானி :சொல்வது

காணக்கிடைக்காத காட்சிகள்!யோகன்
பாரிஸ்! அற்புதம்! இயற்கையின் கற்பனைகள் எப்படியெப்படியெல்லாம்
விரிந்திருக்கின்றன!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

மாயா!
இந்தப் பனை நெடுந்தீவில் மாத்திரம் தான் உண்டா? அல்லது வடமாகாணத்தில் வேறு பகுதியிலும் உண்டா??

சயந்தன் :சொல்வது

யோகன் அண்ணை. உங்க பதிவுக்குப் பிறகு எனக்கு கிடைத்த தகவல்களைத் தாறன் -

முதல் இரண்டு படங்களிலுமுள்ள மரம் வடமராட்சி கிழக்கில் வல்லிபுரத்தில் உள்ளது. தவிர இது பனை மரம் இல்லை .

ஒரு வகை பாம் இன வகை மரம். தென்கிழக்காசியாவில் அதிகம் உள்ளதாம்.

கிளைகள் உள்ள பனைமரம் மன்னார் வட்டக்கண்டலில் உள்ளது. (ஒரிஜினல் பனைமரம்)

சின்னக்குட்டி :சொல்வது

//முதல் இரண்டு படங்களிலுமுள்ள மரம் வடமராட்சி கிழக்கில் வல்லிபுரத்தில் உள்ளது//

ஓம் நேரை பார்த்திருக்கிறன்

Anonymous :சொல்வது

மன்னிக்க தகவல் தருவதற்கு
இந்த மரம் நெடுந்தீவில் இல்லை. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வல்லிபுரம்பகுதியில் உள்ளது.மந்திகைச்சந்தியிலிருந்து வடமராட்சி கிழக்குநோக்கி செல்லும் வீதி வடமராட்சி கிழக்கு வீதியில் இணையும் இடத்தில் வீதியோரத்தில் இந்த மரம் இருக்கு. மூன்று அல்லது நான்கு மரங்கள் அங்கு இருக்கின்றன.தவிர இவை பனை அல்ல. இது ஒரு வகை பாம் மரம் பனை வகை அல்ல.இவை அரபுக்களால் கொண்டு வரப்பட்டிருக்கவேண்டும் என்னு கருதப்படுகின்றது. வடமராட்சி கிழக்கை அக்குவேறாக ஆராய 1993ல் நான் சென்றபோது அதனை பார்த்திருக்கிறன்.நெடுந்தீவில் கிளைப்பனைகள் அல்லது இந்த வகை பாம் மரங்கள் இல்லை.அங்கு பனைகளும் பேரீச்சமரங்களும் ஈச்சமரங்களும் இருக்கின்றன.பேரிச்சமரங்கள் அரபுக்களால்; கொண்டுவரப்பட்டன.மேலும் யாழ்ப்பாணத்தில் சுற்றவளவு அதிகமான மரமான பெருக்கமரம் நெடுந்தீவில் உள்ளது.அது அரபுக்களால் கொண்டுவரப்பட்டது.மன்னார் வட்டக்கண்டலில் நமது உள்ள+ர்ப்பனை கிளைகளுடன் உள்ளது.இ;ப்போது செல்தாக்குதல் பகுதியாக உள்ளதால் அதன் படத்தை தரமுடியவில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

நானானி!
ஏனையோர் பின்னூட்டம் படிக்கவும். சுவையான தகவல்கள் அள்ளித் தெளிக்கிறார்கள்.
இது பனை அல்ல; பனை வகை எனும் நண்பர்கள் கூற்று சரி போல உள்ளது.

ஆனால் நெடுந்தீவில் இருந்தது ;பனை -அதன் படம் 42 வருடங்களுக்கு முன் என் நெடுந்தீவு சக பாடசாலைத் தோழன் கொண்டுவந்து காட்டினார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

சயந்தன்!
பனங்கூடலில் நின்றதும்; இரண்டாவது படமும் பனையெனும் முடிவுக்கு வந்தது; தமிழ்நாத ஆங்கிலக் குறிப்பும் நான் பனை என எண்ணினேன்.
மன்னார் செய்தி எனக்குப் புதிது.
ஆனால் நெடுந்தீவில் இருந்தது பனையே; அப்படம் நான் 42 வருடங்களுக்கு முன் பார்த்தது; அப்படத்தில் 3 அல்லது 4 கிளைகள் இருந்ததாக ஞாபகம்; அந்தக் காலத்தில் எந்த நகாசு வேலையும் செய்ய முடியாது; அது உண்மையான படம். இன்று அந்தப்பனை இருக்கச் சந்தர்ப்பம் இல்லை; நான் பார்த்த படத்தில் இருந்த மரம் 3 மாடி உயரமாவது இருக்கும்.
தகவல்களுக்கு நன்றி

Paheerathan :சொல்வது

இதே மாதிரி மரங்கள் மட்டக்களப்பில் Weber மைதானத்திற்கு அருகில் இருக்கின்றன அங்கு அதனை சீமை பனைமரம் என்று அழைப்போம்

குமரன் (Kumaran) :சொல்வது

பல முறை இந்த மாதிரி பனை மரங்களையும் தென்னைமரங்களையும் தமிழகத்தில் பார்த்திருக்கிறேன் ஐயா. எந்தப் பகுதியில் பார்த்தேன் என்பது நினைவில்லை. இரண்டு கிளைகளைக் கொண்ட பனை மரத்தைச் சிறு வயதில் மதுரையிலிருந்து பழனிக்குச் செல்லும் பாதையில் பார்த்தது போல் நினைவில் தோன்றுகிறது. மற்றவை அழகர் கோவில் போகும் போதோ கோவை சுற்று வட்டாரத்திலோ பார்த்திருக்கலாம்.

குமரன் (Kumaran) :சொல்வது

பின்னூட்டங்களில் சொல்லப்பட்டது போல் நான் பார்த்தவையும் ஈச்ச மரங்களாக இருக்கலாம்.

Anonymous :சொல்வது

wowwww

வசந்தன்(Vasanthan) :சொல்வது

யாழ்ப்பாணத்தில் மட்டும் பல இடங்களில் இப்படியான மரங்கள் இருந்தன.
மாதகலில் தொம்மையப்பர் கோயில் வளவில் ஐந்து கிளைகளுடன் தென்னை மரம் ஒன்று நின்றது. நிறையப் பேர் தங்குமிடமொன்றுக்கு அருகில் நின்றதால் எந்த நேரமும் பயம் தான். சற்றுப் பலத்த காத்தடித்தால் இந்தா விழுகிறேன் என்று தாண்டவமாடும். 1992 முற்பகுதியில் அதன் கிளைகளைத் தறித்துவிட்டார்கள். பின்னர் முழு மரத்தையும் தறித்துவிட்டதாகக் கேள்வி.

அதேபோல் இரு கிளைகளுடன் பனையொன்றும் மாதகலில் நின்றது.

பேசாலையில் பதினாறு கிளைகளுடன் பனையொன்று நின்றதை எனது சிறிய வயதில் பார்த்த ஞாபகம். இப்போதும் நிற்கிறதா தெரியவில்லை.

பளை, அரசர் கேணியில் நான்கைந்து தென்னைகள் பார்த்துள்ளேன் கிளைகளுடன்.

வன்னியிலும் நிற்கின்றன என நினைக்கிறேன். இறைவன் (இங்குப் பின்னூட்டமிட்டவரைச் சொன்னேன்..;-) நினைத்தால் தரவுகள் தரலாம்.

வவ்வால் :சொல்வது

நல்ல வித்தியாசமான படங்க்ள்,

இவ்வாறு கிளை விடுவது மரத்தில் ஏற்படும் மரபியல் கோளாறு காரணமாக எனக்கேள்விபட்டுள்ளேன்! தமிழ் நாட்டிலும் ஒரு சில படங்களை பத்திரிக்கைகளும் அதிசயப்படமாக போட்டு இருந்தார்கள். படம் கிடைத்தால் நானும் காட்டுகிறேன்.

இதே போல கிளை விட்ட பப்பாளி மரம் கூட பார்த்து இருக்கிறேன்!

சயந்தன் :சொல்வது

// இறைவன் (இங்குப் பின்னூட்டமிட்டவரைச் சொன்னேன்..;-) நினைத்தால் தரவுகள் தரலாம்.//

ம். எல்லாம் இறைவனின் கையில்த்தான் இருக்கிறது. :))

தீவிரவாசகன் :சொல்வது

அருமையான படங்களினை பார்வைக்குத் தந்த யோகனுக்கு நன்றி.
நான் இதைப்போன்ற கிளைத் தென்னை மரத்தினை மட்டக்களப்பு பகுதியில் கண்டுள்ளேன், கிளைப் பனை மரத்தினை இவ்வாறு பார்க்கவில்லை ஆனால் மலேசியாவில் இதைப் போன்ற மரங்களைப் பார்த்துள்ளேன் ஆனால் அவை பாம் ஒயில் தயாரிக்கும் மரத்தினை ஒத்தவை.

மாசிலா :சொல்வது

வித்தியாசமான படங்கள்.
படங்களுக்கு நன்றி யோகன் பாரிஸ்.

வெற்றி :சொல்வது

யோகன் அண்ணை,
உண்மையில் அருமையான படங்கள்தான். நான் இதுவரை தென்னை, பனை, கமுகு போன்ற மரங்களைக் கிளையுடன் பார்த்ததில்லை.

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

சின்னக்குட்டியர்!
நேரே!! பனையேனப் பார்த்தீர்களா? பாம் மரமெனப் பார்த்தீர்களா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

இறைவனுக்கு!
இந்த இணையத்தில் எழுதுவதே!!
தெரியாததைத் தெரியவே!!
தாங்கள் தகவல் தருவதை நாம் ஏன் மன்னிக்க வேண்டும்.
இது மகிழவேண்டிய விடயம்.
நிற்க,
முதற் படம் சற்றுச் சந்தேகம் தந்த போதும், இரண்டாம் பட வட்டு, ஓலை, அத்துடன் சற்று மங்கலாக ஆண்பனைப்பூம் பாளை போலும் தெரிந்ததாலும் ,பனங்கூடலிலும் நின்றதாலும் ,நான் பனையென எண்ணி விட்டேன்.
ஆனால் நெடுந்தீவுக் கிளைப்பனைப் படம் நான் 42 வருடங்களுக்கு முன் பார்த்தது. நல்ல ஞாபகம் உண்டு. 3 அல்லது 4 கிளை...அந்த வயதில் அது ஆண்பனையா? பெண்பனையா? என நான் ஆயவில்லை.அப்படத்தை எனக்குக் காட்டியது அதன் அருகில் வசித்த என் பாடசாலைத் தோழன்.
இப்போ 50,60 வயதாகும் நெடுந்தீவன்பர்களைக் கேட்டால் விபரம் கூறுவார்கள்.
அந்தக் காலத்தில் இலங்கையில் படம் ஒட்டு வேலைகள் செய்திருப்பார்கள் என நினைக்க முடியவில்லை.
இலங்கையில் கிளைப்பனை இருந்துள்ளது..என்பது பின்னூட்டங்களில் தெளிவாகிறது.
யாராவது படத்துடன் வருகிறார்களா?
எனப் பார்ப்போம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

ரதன்!
மட்டக்களப்பில் உள்ளது, நண்பர்கள் கூறும் பாம் வகை மரமாக இருக்கலாம். சீமைப் பனை அருமையான பெயரும் தகவலும்
நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

குமரன்!
ஈச்சமரம் அதன் ஓலையில் வித்யாசப்படும்.
எனினும் நீங்கள் கண்டவை!!
பனையாகவும் இருக்கலாம்.
எனெனில் இலங்கையில் இருந்துள்ளது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

வசந்தன்!
இப் படத்திலுள்ளவை, கிளைப்பனை இல்லாதிருக்கலாம்.
ஆனால் இலங்கையில் கிளைப்பனை உங்கள் காலத்தில் நின்றுள்ளது.
அத்துடன் மாதகல் தென்னை விடயம் இப்போதே கேள்விப்படுகிறேன்.
மிக விபரமான பின்னூட்டத்துக்கு நன்றி!
எப்படியும் ஒரு படம் தேடி எடுக்க முயலவும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

வவ்வால்!
மரபுக் கோளாறோ? என்னமோ யானறியேன். ஆனால் ஒரு வித்திலைத் தாவரங்கள் கிளைவிடா எனப்படித்தேன்.
இவை கோடியில் ஒன்று
நிற்க !
பப்பாளி மரம் கிளை விடுவது, இயல்பான விடயம்.பொதுவாக முதிரும் போது பப்பாளியின் முதல் முனை குறுக, ஓரத்தில் கிளைகள் தோன்றிக் காய் தரும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

சயந்தன்!
எல்லாம் இறைவன் கையில் என்பதை(பின்னூட்டிய இறைவன்) நன்கு புரிந்தேன்.
நல்ல இறைநம்பிக்கை உள்ளவனானாலும், இதுக்கெல்லாம் அவர் வரார்.
அது புரிந்துள்ளேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

வாசகன்!
பின்னூட்டமெல்லாம் படித்திருப்பீர்கள்.
இது நீங்கள் கூறும் பாம் பரமே!!
மட்டக்களப்பு கிளைத் தென்னை புதிய செய்தி

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

மாசிலா!
பின்னூட்டங்களில் நிறைய விபரம் கூறுகிறார்கள் படிக்கவும்.
இது பனை இல்லை பாம் மரம்.
பாமொயில் உங்களுக்குத் தெரியலாம்.
மலேசியா,இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

வெற்றி!
இதுவரை நானும் கண்டதில்லை படங்களிலேயே!
இப்படத்தில் உள்ளது பனையில்லை.
பாம் மரம் என நண்பர்கள் கூறுகிறார்கள். இப்போ வித்யாசம் புரிகிறது.
இது வரை கமுகு நான் படத்தில் கூட பார்க்கவில்லை.

Sundar Padmanaban :சொல்வது

எனக்கு நினைவு தெரிந்து இம்மாதிரி மரங்களை நான் வசித்த இடங்களில் கண்டதில்லை.

//மரபியல் கோளாறு//

பொருத்தமான வார்த்தைதான்! :-)

நன்றி.

துளசி கோபால் :சொல்வது

அட! ஆச்சரியமா இருக்கே! பனைக்கும் தென்னைக்கும் கிளைகளா?

சூப்பர் படங்கள் யோகன்.

மலைநாடான் :சொல்வது

யோகன்!
படங்களுக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி.

நெடுந்தீவில் நின்றது பனைமரமே. சரியாகச் சொல்வதனால் ஐந்து கிளைகளுடன் இருந்தது. அது பட்டுப்போனதன் பின்னும் நீண்டகாலம் அப்படியே இருந்தது. சிதிலமடைந்த பழைய கோட்டைக்குச் சமீபமாக இருந்ததென ஞாபகம்.


// இறைவன் (இங்குப் பின்னூட்டமிட்டவரைச் சொன்னேன்..;-) நினைத்தால் தரவுகள் தரலாம்.//

//ம். எல்லாம் இறைவனின் கையில்த்தான் இருக்கிறது. :))//

ஆனாலும் இறைவன் எழுதியதற்கு இப்படியெல்லாம் கலாய்ப்பா ? :)

Anonymous :சொல்வது

நெடுந்தீவில் கிளைப்பனைகள் இருந்திருக்கலாம் என்று கருதிகிறேன்.நெடுந்தீவில் பனைகள் நிறைய இருப்பதால் இருந்திருக்க சாத்தியம் இருக்கு.இருப்பினும் நெடுந்தீவில் அரபுக்களால் அதிகம் மரங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.அதில் தென்கிழக்காசிய கிளைகள் கொண்ட பாம் மரங்களும் இருக்கலாம்.தகவலை சேகரியுங்கள்.யாழ்ப்பாணத்தின் சுற்றளவு அதிகமான பெருக்கமரம் படத்தை விரைவசில் தாறன். தென்னாசியாவில் சுற்றளவு அதிக மரம் எங்கு இருக்கிறது தெரியுமா?
மன்னாரில்
மன்னார் பள்ளிமுனையில் உள்ள பெருக்க மரம்தான் அது.அரபுக்கள் இதi கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற வராலற்றுத்தகவல் இருக்கிறது.இதனையும் படம் எடுத்தேன் தேடவேண்டும்.இருக்கிறது தேடித்தருகிறன்.வட்டக்கண்டலில் நமது உள்ளு}ர் பனைகிளைகளுடன் இருப்பதை ஓயாத அலைகள் 3 நடவடிக்கையில் இப்பகுதி மீட்கப்பட்டபோது போனவேளையில் பார்த்திருக்கிறன். படம் எடுக்க அப்போது கருவி இல்லை.பின்னர் நான் அங்கு செல்லவில்லை.மறுபக்கம் தென்னைகள் அதிக இடங்களில் கிளைகளுடன் இருக்கின்றன.பளையில் உள்ளன.வேறு இடங்களிலும் உள்ளன.இப்படியான நமது ஊர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுங்கள்.

வசந்தன்(Vasanthan) :சொல்வது

ஆரேன் மாதகல் கத்தோலிக்கரைப் பிடிச்சால் கிடைக்கலாம். அனேகமாக, நிறையப்பேர் அந்தத் தென்னையைப் படமாக வைத்திருந்தார்கள். அந்தநேரத்தில வீடியோ எடுத்து நடந்த கத்தோலிக்கக் கலியாணங்கள் ஒண்டிலகூட அந்தக் கிளைத்தென்னை தவறியிருக்க வாய்ப்பே இல்லை.

பப்பாளி கிளையுடன் நிற்பது அதிசயமல்லவே?

தீவிரவாசகன் :சொல்வது

மட்டக்களப்பின் தென்பகுதியில் உள்ள காரைதீவு எனும் கிராமத்தின் முதலாம் குறிச்சியில் டாக்டர் அ. வரதராஜன் என்பவரின் வீட்டில் 30 வருடங்களுக்கு முன் கிளைத் தென்னை மரத்தினைப் பார்த்துள்ளேன்.
1978 ஆம் ஆண்டு இப்பகுதியில் சூறாவளி ஏற்பட்டதால் இம் மரம் எஞ்சியிருப்பது கடினம், இப்போது அத்தென்னை மரம் அங்கு இருக்கின்றதோ தெரியவில்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

சுந்தர்!
சரி படத்திலாவது பாருங்கள் ;என்னைப்போல்.
நிற்க;

மரபியல் கோளாறு அதிசயமாகிறது.
ஆனால் மூளைக் கோளாறு கேலியாகிறது.என்ன? உலகம் சுந்தர்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

துளசியக்கா!
இது பனையில்லையாம்; பாம் மரமாம். ஆனால் இலங்கையில் கிளைப் பனை இருந்தது. என்பது உண்மை. பலர் பின்னூட்டத்திலும் கூறியுள்ளார்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

மலைநாடர்!
நான் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு என எண்ணினேன். உங்கள் காலத்தில் அது பட்டுருந்தாலும் ஆச்சரியமில்லை. அது நல்ல வயதான பனையே!!
நான் அதைப் படமாகத் தான் பார்த்தேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

இறைவன்!
மிக விபரமான தகவல்கள் அடங்கிய பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி!!
நீங்கள் குறிப்பிட்ட மன்னார் பெருக்கமரம் பற்றிய பதிவு 2 ஏற்கனவே படத்துடன் 09 - 12 - 2006 ல் இட்டுள்ளேன்.பின் வரும் சுட்டியில் பார்க்கவும்.
http://johan-paris.blogspot.com/2006/12/blog-post_09.html

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

வசந்தன்!
அந்த மாதகல் தென்னைப் படத்தினை நீங்களும் விசாரியுங்கள். நானும் முயல்கிறேன்.
ஆம் ; கிளைப்பப்பாளி அதிசயமல்ல.
அதை வவ்வாலுக்கு பின்னூட்டியுள்ளேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

வாசகன் மிக விபரமான மேலதிக கிளைத் தென்னை பற்றிய தகவலுக்கு நன்றி!!
யாரிடமாவது படம் கிடைக்குமா??
முயன்று பாருங்கள்.

மாயா :சொல்வது

ஆனால் நெடுந்தீவில் நிற்பது உண்மையில் பனையே !
நண்பர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

//ஆனால் நெடுந்தீவில் நிற்பது உண்மையில் பனையே !
நண்பர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன் //

மாயா!
சிறு திருத்தம்,'' நின்றது'' என்பதே பொருத்தம் .அப்பனை பட்டுவிட்டதாக மலைநாடர் கூறுகிறார். யானும் நம்புகிறேன்.
அந்த ஒன்றே இருந்தது.

மாயா :சொல்வது

சரி அண்ணா

பகீ :சொல்வது

என்ன இது. இவ்வளவு நாளும் நான் பனையெண்டெல்லோ நினைச்சன். அப்ப அது பனையில்லையே. எனிமேல் அவடத்தால போகக்க ஒருக்கா வடிவா பாக்க வேணும் (நெடுகலும் போய் வாறனான்)

ஊரோடி

யோகன் பாரிஸ்(Johan-Paris) :சொல்வது

ஊரோடி பகீ!
தாவரவியல் நிபுணர்களையே குழப்பிடும் படம் தான்; சரி உங்களுக்கு ஒரு வேலை.
இந்த இரண்டாவது படத்திலுள்ள மரத்தின் வட்டு; பூ;ஓலை; மரப்பகுதி தனித்தனியாக cலொ
படம் எடுத்துத் தரமுடியுமா? இனி எப்போ நாம் அங்க வந்து பார்ப்பது.
நிற்க அயலவர்களிடம் விசாரிக்கவும். இந்தக் காணி யாரவது மலேசியப் பென்சனியருக்குச் சொந்தமானதா?
காரணம்...அந்த நாளில் விதையைக் கொண்டுவந்து தாட்டுவிட்டார்களா? அல்லது கடலில் மிதந்து வந்ததா?
அல்லது ஒல்லாந்தர்; போத்துக்கேயர் ஆட்சியில் நட்டுப் பார்த்தார்களா?

பகீ :சொல்வது

கட்டாயம் செய்யிறன் யோகன் அண்ணா..

அவடத்தை கமரா கொண்டுபோக விடுறாங்களோ தெரியேல்ல. பாப்பம்.

bage

Anonymous :சொல்வது

தமிழகத்திலும் கிளைப்பனை இருக்கிறது. வேலுர் மாவட்டம் சோளிங்கபுரம் அருகில் உள்ள எரும்பி யென்னும் கிரமத்தில் பல கிலைகளுடன் கூடிய கிளைப்பனை இருக்கிறது.

Unknown :சொல்வது

தமிழகத்திலும் கிளைப்பனை இருக்கிறது. வேலுர் மாவட்டம் சோளிங்கபுரம் அருகில் உள்ள எரும்பி யென்னும் கிரமத்தில் பல கிலைகளுடன் கூடிய கிளைப்பனை இருக்கிறது.